PUBLISHED ON : மே 22, 2023

பான்டோதேனிக் அமிலம் என்பது பி5 வைட்டமினின் பெயராகும்.
உண்மை. பி5 என்னும் பான்டோதேனிக் அமிலம் (Pantothenic acid), உணவில் இருந்து ஆற்றலைப் பெற உதவுகிறது. இச்சத்து, இறைச்சி, மீன், முட்டை, பால், காய்கறிகள், கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் ஆகியவற்றில் மிகுந்து காணப்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்திற்கும், ஹார்மோன்கள், கொழுப்பின் உற்பத்திக்கும் அவசியமாகும். இச்சத்து குறைபாடு ஏற்படுவது அரிதானது. ஏற்பட்டால் சோர்வு, தூக்கமின்மை, சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படும்.
சிபிலிஸ் என்பது நீரின் மூலம் பரவக்கூடிய நோயாகும்.
தவறு. சிபிலிஸ் என்பது, ட்ரெபோனேமா பாலிடம் (Treponema pallidum) என்ற பாக்டீரியாவால் ஏற்படும். இது பாலியல் ரீதியாகப் பரவும் நோய் (STD) ஆகும். சிபிலிஸின் அறிகுறிகளை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதன்மை சிபிலிஸில், நோய்த்தொற்றுக்கு ஆளான 10 நாட்கள் முதல் மூன்று மாதங்களுக்குள் அறிகுறிகள் தோன்றும். முதல் அறிகுறி பிறப்புறுப்பு, மலக்குடல் அல்லது வாயில் சிறிய வலியற்ற புண் உண்டாகும். இரண்டாம் நிலை சிபிலிஸில், அப்புண்கள் மறைந்துவிடும், ஆனால், சொறி உடல் முழுவதும் பரவும். கடைசி நிலை, மூன்றாம் நிலை சிபிலிஸ் ஆகும். இது ஆரம்ப நோய்த்தொற்றின் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது. சிபிலிஸின் சில முக்கிய விளைவுகள் உணர்வின்மை, குருட்டுத்தன்மை, பக்கவாதம், இதயநோய் போன்றவையாகும்.
