PUBLISHED ON : மே 22, 2023

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த கட்சி எது?
அ. பாரதிய ஜனதா
ஆ. காங்கிரஸ்
இ. சர்வோதயா கர்நாடகா
ஈ. மதச்சார்பற்ற ஜனதா தளம்
2. தமிழக, மத்திய தொல்லியல் துறை சார்பில் கண்டெடுக்கப்படும் தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த, ரூ.15 கோடி மதிப்பில், எந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில், பெருநை அருங்காட்சியகம் அமைய உள்ளது?
அ. தூத்துக்குடி
ஆ. கன்னியாகுமரி
இ. திருநெல்வேலி
ஈ. தென்காசி
3. இந்திய அளவில், நிறுவனங்கள் எந்த அளவுக்குத் தங்களுடைய உற்பத்தியில் புதுமைகளைக் கையாள்கின்றன என்பது குறித்த ஆய்வு ஒன்றில், மிகவும் புதுமையான மாநிலங்கள் பட்டியலில், முதலிடத்தில் உள்ளது எது?
அ. தமிழ்நாடு
ஆ. கர்நாடகம்
இ. தெலங்கானா
ஈ. கேரளம்
4. தாய்லாந்தில் நடந்த பொதுத்தேர்தலில், வெற்றிபெற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதால், எத்தனை ஆண்டுகளாக அங்கு நடந்த ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது?
அ. பத்து
ஆ. ஐந்து
இ. ஒன்பது
ஈ. எட்டு
5. கேரளத்தில், டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்களைத் தாக்கினால், எத்தனை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க, கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
அ. 7
ஆ. 10
இ. 5
ஈ. 8
6. நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரர் கமி ரிட்டா, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை, சமீபத்தில் எத்தனையாவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்?
அ. 30
ஆ. 20
இ. 25
ஈ. 27
7. சுதந்திரம் என்ற பெயரில், தனியாகப் பிரிந்து செல்லும் தைவானின் முயற்சியை முறியடிக்க, தங்கள் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக, எந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது?
அ. அமெரிக்கா
ஆ. சீனா
இ. இந்தியா
ஈ. ஜப்பான்
8. சர்வதேச அரங்கில், ஒரே ஆண்டு இடைவெளியில், டெஸ்ட், ஒரு நாள், சர்வதேச, பிரீமியர் டி-20 என, அனைத்துவித கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ள வீரர்?
அ. ரோஹித் சர்மா
ஆ. விராத் கோஹ்லி
இ. சுப்மன் கில்
ஈ. முகமது சிராஜ்
விடைகள்: 1. ஆ, 2. இ, 3. ஆ, 4. இ, 5. அ, 6. ஈ, 7. ஆ, 8. இ.
