PUBLISHED ON : ஆக 21, 2023

வக்யூட்டா என்பது அழிந்து வரும் பாலூட்டி.
உண்மை. வக்யூட்டா (Vaquita) என்பவை, கடலில் வாழும் அரிய பாலூட்டிகள். இவை சராசரியாக 5 அடி நீளம் வளரும். இவற்றின் முகம், வாய்ப்பகுதி கூர்மையாக இல்லாமல், மழுங்கி இருக்கும். மெக்சிகோ நாட்டின் கலிஃபோர்னியா வளைகுடாவில் மட்டுமே இவை காணப்படுகின்றன. அதிக அளவிலான மீன்பிடித்தலால், வேகமாக அழிந்து வருகின்றன. தற்போது இவை 30 மட்டுமே உள்ளன. விரைவில் இவையும் அழிந்துபோக வாய்ப்பு உள்ளது.
சொசைட்டி கார்லிக் (Society Garlic) தாவரம் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது.
தவறு. இந்தத் தாவரத்தின் பூக்களும், புற்களைப் போன்ற இலைகளும் பூண்டு போன்ற மணத்தை உடையவை, அதனால்தான் இப்பெயரைப் பெற்றன. என்றாலும்கூட இவை அல்லியம் (Allium) எனும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல. அமெரிலிடாசியே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றின் பூர்விகம் தென் ஆப்பிரிக்கா. அறிவியல் பெயர் துல்பாகியா வியோலாசியே (Tulbaghia violacea). இந்தப் பூண்டு மணமே இவற்றை மான்களிடமிருந்து காப்பாற்றுகிறது.
