sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

ஓடி விளையாடு

/

ஓடி விளையாடு

ஓடி விளையாடு

ஓடி விளையாடு


PUBLISHED ON : மே 01, 2023

Google News

PUBLISHED ON : மே 01, 2023


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளையாட்டுப் பிரபலங்கள் யார்?

குறிப்புகளைக் கொண்டு பிரபலமான இந்த இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளைக் கண்டறியவும்.

01. கடந்தாண்டு (2022) ஜூலையில், ராஜ்யசபா எம்.பி.யாகவும், நவம்பரில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபாவின் தலைவருமான ஜக்தீப் தங்கர் விடுமுறை எடுத்ததை அடுத்து, ராஜ்ய சபாவைத் தற்காலிகமாக நடத்தினார்.

யார் இந்த வீராங்கனை?

02. 'ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உள்ள ஐம்பது ஓவர்களை, முதலில் ஓர் அணி 25 ஓவர்கள் விளையாட வேண்டும். எதிரணி அடுத்து 25 ஓவர்கள் விளையாட வேண்டும். இவ்வாறு விளையாடினால், பௌலர்கள் சோர்ந்து போக மாட்டார்கள்' என்று சமீபத்தில் கருத்துக் கூறியுள்ளார் இந்தக் கிரிக்கெட் வீரர். ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் ஸ்டாண்டிற்கு, இவரின் பெயரைச் சமீபத்தில் சூட்டி, ஐக்கிய அரபு அமீரகம் பெருமைப்படுத்தியது. வாழ்நாளில் 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரர்.

யார் இந்த இந்திய கிரிக்கெட் வீரர்?

03. ஹரியாணாவில் பிறந்தவர். ஹைதராபாத்தில் வசிப்பவர். ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மூன்று முறை பங்கேற்றவர். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ளார். 'பிளேயிங் டு வின்: மை லைஃப் ஆன் அண்ட் ஆஃப் கோர்ட் (Playing to win, my life... on and off court) என்ற பெயரில், சுயசரிதை எழுதிய இந்திய இறகுப் பந்து (பேட்மிண்டன்) வீராங்கனை இவர். கராத்தேவில் பிரௌன் பெல்ட்டும் பெற்றுள்ளார்.

யார் இவர்?

விடைகள்:

1. பி.டி.உஷா

2. சச்சின் டெண்டுல்கர்

3. சாய்னா நேவால்







      Dinamalar
      Follow us