PUBLISHED ON : ஜூலை 17, 2023

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. தமிழகத்தில் மக்கள்தொகை எவ்வளவு கோடியைத் தாண்டியுள்ளதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்?
அ. 9 கோடி
ஆ. 8.50 கோடி
இ. 8.04 கோடி
ஈ. 6 கோடி
2. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில்,
15 ஆண்டுகளில், எவ்வளவு கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு, மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டு உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுத் தெரிவித்துள்ளது?
அ. 35.40 கோடி
ஆ. 41.50 கோடி
இ. 40.02 கோடி
ஈ. 50.20 கோடி
3. பெங்களூருவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி ஆதியா, சமீபத்தில் மிக உயரமான கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த மலைச்சிகரம், எந்தக் கண்டத்தில் அமைந்துள்ளது?
அ. ஆப்பிரிக்கா
ஆ. ஆன்டார்டிகா
இ. ஆஸ்திரேலியா
ஈ. தென் அமெரிக்கா
4. இந்தியாவில், கடந்த 2018 - 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, ஜவுளி ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?
அ. குஜராத்
ஆ. ராஜஸ்தான்
இ. கர்நாடகம்
ஈ. தமிழகம்
5. மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, சமீபத்தில் எந்த இரு பொருட்களுக்கு, கட்டாயத் தரக்கட்டுப்பாட்டு ஆணையை வெளியிட்டுள்ளது?
அ. மிக்சி, கிரைண்டர்
ஆ. வாஷிங் மெஷின், பிரிஃட்ஜ்
இ. குடிநீர் பாட்டில், லைட்டர்
ஈ. வாட்டர் ஹீட்டர், ஏ.சி.
6. சென்னையில், 20 ஆண்டுகளுக்கு முன் செயல்பாட்டில் இருந்த, எந்த வகையான பஸ் சேவையை மீண்டும் செயல்படுத்த, தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது?
அ. டீலக்ஸ்
ஆ. டபுள் டெக்கர்
இ. எலெக்ட்ரிக்
ஈ. டிரெய்லர்
7. தாய்லாந்தில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர், 10,000 மீ. நடைப் பந்தயத்தில், இந்தியாவின் அபிஷேக் பால் வென்ற பதக்கம்?
அ. வெண்கலம்
ஆ. தங்கம்
இ. வெள்ளி
ஈ. பிளாட்டினம்
விடை: 1. இ, 2. ஆ, 3. அ, 4. ஈ, 5. இ, 6. ஆ, 7. அ.
