தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : டிச 04, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தர வரிசையில், இந்திய அளவில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், தற்போது எந்த நிலைக்கு முன்னேறி, 'லீடர்' தகுதியைப் பெற்றுள்ளது?

அ. ஒன்றாம்

ஆ. இரண்டாம்

இ. மூன்றாம்

ஈ. நான்காம்

2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. அருணாசல பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

3. தமிழகத் தொழில்துறை அமைச்சர் ராஜாவின் மகள் நிலா, டில்லியில் நடந்த, தேசிய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டி ஜூனியர் பெண்கள் பிரிவில், எத்தனையாவது முறையாக தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்?

அ. முதலாவது

ஆ. இரண்டாவது

இ. மூன்றாவது

ஈ. நான்காவது

4. 'ஒரு சில விஷயங்களில் அரசின் தலையீடு இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், பின்தங்கியவர்களை நசுக்கும் பாகுபாடு தொடர்வதற்கு முக்கிய காரணம்' என சமீபத்தில் பேசியவர்?

அ. டி.ஒய்.சந்திரசூட்

ஆ. ராகுல்

இ. திரெளபதி முர்மு

ஈ. பிரியங்கா

5. சமீபத்தில் நடந்த, ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில், மொத்தம் எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாயின?

அ. 70

ஆ. 78

இ. 68

ஈ. 65

6. பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைக்க, 'ஆக்மி' நிறுவனத்திற்கு, தூத்துக்குடி துறைமுகம் அருகே, எவ்வளவு ஏக்கர் நிலத்தை, தமிழக மின் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது?

அ. 250

ஆ. 220

இ. 300

ஈ. 320

7. பாரா வில்வித்தை காம்பவுண்டு பிரிவு தர வரிசையில் உலகின் நம்பர்- 1 வீராங்கனையாக இடம் பிடித்துள்ளவர்?

அ. ராணி ஷீத்தல்

ஆ. ஷீத்தல் தேவி

இ. பிரியா பவானி

ஈ. நேத்ரா

8. சீனாவின் மிகப்பெரிய தனியார் குழுமங்களில் ஒன்றான எந்த நிறுவனம், ரூ.5.31 லட்சம் கோடி கடன்களுடன் திவாலாகி உள்ளதாக அறிவித்துள்ளது?

அ. சாங்க்ஷி என்டர்பிரைஸ்

ஆ. அலிபாபா குழு

இ. அமோய்

ஈ. சினோபெக் குழு

விடைகள்: 1. இ, 2. ஈ, 3. ஆ, 4. அ, 5. இ, 6. ஆ, ௭. ஆ. 8. அ,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us