
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடைகளைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. உள்கட்டமைப்பு, மாணவர் எண்ணிக்கை, பாடத்திட்டம் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள எந்தப் பல்கலைக்கு, 'நாக்' என்ற தேசிய தர அங்கீகார அமைப்பின் அந்தஸ்து, முதல் இடத்திற்கு தரம் உயர்த்தப்பட்டு உள்ளது?அ. தமிழ்நாடு பல்கலை
ஆ. சென்னை பல்கலை
இ. பாரதியார் பல்கலை
ஈ. காமராஜர் பல்கலை
2. இந்தியாவில், சமீபத்தில் வெளியான ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், எந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது?
அ. தெலங்கானா
ஆ. மத்திய பிரதேசம்
இ. ராஜஸ்தான்
ஈ. சத்தீஸ்கர்
3. ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோ, 'மனித குலத்தின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள்' பட்டியலில், குஜராத்தின் பிரபலமான எந்த நடனத்தையும் சேர்த்துள்ளது?
அ. பாங்ரா
ஆ. கித்தா
இ. ஒடிசி
ஈ. கர்பா
4. அமெரிக்காவில் வெளியாகும் பிரபல வணிக இதழான, 'போர்ப்ஸ்' வெளியிட்டுள்ள, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில், 32வது இடத்தைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் யார்?
அ. வசுந்தரா ராஜே
ஆ. ஸ்மிருதி இராணி
இ. நிர்மலா சீதாராமன்
ஈ. நஜ்மா ஹெப்துல்லா
5. 'ஒரே வழித்தடத்தில் மாதத்தில், 20 முறை பயணம் செய்தால், அடுத்து இரண்டு முறை இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்' என, இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது?
அ. கேரளம்
ஆ. தமிழ்நாடு
இ. ஆந்திரம்
ஈ. தெலங்கானா
6. செஸ் அரங்கில் இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றுள்ள, தமிழகத்தின் முதல் வீராங்கனையான இவர், பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.
அ. அனிதா
ஆ. பவித்ரா
இ. வைஷாலி
ஈ. இந்துஜா
விடைகள்: 1.ஆ, 2. அ, 3. ஈ, 4. இ, 5. அ, 6. இ.