PUBLISHED ON : ஜூலை 09, 2018

அ நிறம் | அளவு
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித் தொகைபெற, வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். முதுநிலைப் பட்டப்படிப்புக்கு ரூ.10 ஆயிரம், இளநிலைப் பட்டப்படிப்புக்கு ரூ. 7,500;
பிளஸ்- 2, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ. 6,000 வழங்கப்படும். சிறப்புக் குழந்தைகளின் (மூளை முடக்குவாதம், ஆட்டிசம், கற்றல்குறைபாடு) கல்விக்காக தலா ரூ. 5,000 வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற, மாணவரின் சுய முகவரி எழுதப்பட்ட, ரூ.5 தபால் தலை ஒட்டிய கவருடன் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: நிர்வாக இயக்குனர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, புதிய எண் 14, நான்காவது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையார், சென்னை - 600020.
