sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : செப் 04, 2017

Google News

PUBLISHED ON : செப் 04, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 4, 1825: தாதாபாய் நௌரோஜி பிறந்த நாள்

'இந்தியாவின் முதுபெரும் கிழவர்' என்று போற்றப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 1885ல் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவ உதவியாக இருந்தார். வல்லரசாக அல்ல, வறுமையற்ற தேசமாக இந்தியா உயர வேண்டும் என கனவு கண்டார்.

செப்டம்பர் 5, 1888: சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்

சுதந்திர இந்தியாவின் முதல், குடியரசுத் துணைத் தலைவர்; 2வது குடியரசுத் தலைவர். ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவருக்கு, வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களின் எண்ணிக்கை 133. இவரது பிறந்த நாள் 'ஆசிரியர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 5, 1872: வ.உ.சி. பிறந்த நாள்

வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். ஆங்கிலேய கப்பல்களுக்குப் போட்டியாக, முதல் உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். 'கப்பலோட்டிய தமிழன்' என்று அழைக்கப்பட்டார்.

செப்டம்பர் 8, 1965: உலக எழுத்தறிவு நாள்

அனைவருக்கும் எழுத்தறிவு என்கிற கோட்பாட்டை உலக அளவில் யுனெஸ்கோ உருவாக்கியது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அனைவருக்கும் எழுத்தறிவைப் போதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 9, 1828: லியோ டால்ஸ்டாய் பிறந்த நாள்

ரஷ்யாவைச் சேர்ந்த நாவலாசிரியர். 16 வயதில் எழுதத் தொடங்கினார். 1869ல் வெளிவந்த 'வார் அண்ட் பீஸ்' என்ற நாவல், இவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. ஏராளமான கதைகள், நாவல்கள், நாடகங்களைப் படைத்தார். இவரைப்பற்றி பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 9, 1941: டென்னிஸ் ரிட்சி பிறந்த நாள்

அமெரிக்க கணினி அறிவியலாளர். சி (C) நிரலாக்க மொழியை உருவாக்கினார். இன்று உலகம் முழுக்க கணினி புரோகிராமிங் வேலைவாய்ப்பு அதிகரித்தது இவரால்தான். யுனிக்ஸ் (UNIX) இயங்குதளத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார்.






      Dinamalar
      Follow us