sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மார் 12, 2018

Google News

PUBLISHED ON : மார் 12, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 15, 1963: உலக நுகர்வோர் உரிமைகள் நாள்

நுகர்வோருக்கென பல அடிப்படை உரிமைகள் உள்ளன. அந்த உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களது குறைகளைத் தீர்க்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 16, 1955: தேசிய தடுப்பூசி நாள்

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தடுப்பூசியின் பங்கு முக்கியமானது. கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே ஒழிக்கவும், தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் 16, 1750: கரோலின் ஹெர்ச்செல் பிறந்த நாள்

ஜெர்மன் வானியலாளர். வானியல் அறிஞர் வில்லியம் ஹெர்ச்செலின் தங்கை. இருவரும் வானியலில் புரட்சியை உண்டாக்கினார்கள். சில வால்மீன்களையும் கண்டுபிடித்தார் கரோலின்.

மார்ச் 17, 1962: கல்பனா சாவ்லா பிறந்த நாள்

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை. விண்வெளிப் பயணம் முடித்து தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். வீரதீர சாகசங்கள் புரியும் பெண்களுக்கு, இவரது பெயரில் இந்திய அரசு விருது வழங்கி வருகிறது.

மார்ச் 18, 1858: ருடால்ஃப் டீசல் பிறந்த நாள்

தொழிற்புரட்சியை ஏற்படுத்தினார். நீராவி இன்ஜினுக்கு மாற்றாக 'கம்ப்ரெஷன் இக்னிஷன்' இன்ஜினைக் கண்டுபிடித்தார். அதற்கு 'டீசல்' என்கிற அவர் பெயரே நிலைத்துவிட்டது.

மார்ச் 17, 1990: சாய்னா நேவால் பிறந்த நாள்

இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற முதல் இந்தியர் என்ற பெயரை 2012இல் பெற்றார். 2015இல் 'நம்பர்- 1' இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்தார்.






      Dinamalar
      Follow us