PUBLISHED ON : ஏப் 02, 2018

ஏப்ரல் 2, 1967 - உலக சிறுவர் நூல்கள் நாள்
வாசித்தலை ஊக்குவிக்கவும், சிறுவர் நூல்கள் மீதான கவனத்தை ஈர்க்கவும், சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டி ஆன்டர்சென் என்பவரின் பிறந்த நாளன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் 4, 1855 - பெ. சுந்தரனார் பிறந்த நாள்
'மனோன்மணீயம்' என்னும் கவிதை நாடக நூலை எழுதியவர். அந்த நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக, தமிழக அரசு 1970இல் ஏற்றது.
ஏப்ரல் 5, 1964 - தேசிய கடல்சார் நாள்
இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் எஸ்.எஸ்.லாயல்டி, மும்பையில் இருந்து லண்டனுக்கு வாணிபம் தொடர்பாகப் பயணம் செய்தது. அதனை நினைவுகூரும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் 6, 1938 - கோ. நம்மாழ்வார் பிறந்த நாள்
இயற்கை அறிவியலாளர். இயற்கைவழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தார். பசுமைப் புரட்சி, சூழல் மாசடைதல் தொடர்பாக ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் முன்வைத்தார்.
ஏப்ரல் 7, 1770 - வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த நாள்
ஆங்கிலக் கவிஞர். 1843 முதல் 1850 வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்தார்.
'தி பிரிலியூட்' என்கிற இவரது படைப்பு தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.
ஏப்ரல் 8, 1938 - கோஃபி அன்னான் பிறந்த நாள்
உலக சுகாதார அமைப்பில் பட்ஜெட் அதிகாரியாகப் பணியைத் தொடங்கி, 1997இல் ஐக்கிய நாடுகள் சபையின் 7வது செயலாளராகப் பொறுப்பேற்றார். 2001இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
