sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஏப் 09, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 09, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரல் 12, 2011 - உலக விண்வெளி நாள்

யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961இல் முதல் மனிதனாக விண்வெளி சென்றார். இந்தப் பயணம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக ஆண்டுதோறும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 13, 1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை

ரௌலட் சட்டத்தை எதிர்த்து, ஜாலியன்வாலா பாக் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதைக் கலைக்க ஜெனரல் டயர் தலைமையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 13, 1930 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்

தமிழறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். சமூக சீர்திருத்தக் கருத்துகளை எளிமையான தமிழில் பாடல்களாக எழுதினார். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 14, 1891 - அம்பேத்கர் பிறந்த நாள்

நாட்டின் முதல் சட்ட அமைச்சர். இந்திய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவருக்கு 1990இல் வழங்கப்பட்டது.

ஏப்ரல் 15, 1452 - லியனார்டோ டா வின்சி பிறந்த நாள்

இத்தாலிய கட்டடக் கலைஞர். சிற்பி, ஓவியர் என பல்துறை மேதையாகவும் இருந்தார். கடைசி விருந்து, மோனா லிசா போன்ற இவருடைய ஓவியங்கள் அழியாப் புகழ் பெற்றவை.

ஏப்ரல் 15, 1469 - குருநானக் தேவ் பிறந்த நாள்

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தார். சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மிக தளத்தை உருவாக்கினார்.






      Dinamalar
      Follow us