தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மே 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 22, 1992 - சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

மனிதர்களாகிய நமக்கு பூமியில் வாழ உரிமை இருப்பது போல, தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இருக்கிறது. உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மே 22, 1772 - ராஜாராம் மோகன் ராய் பிறந்த நாள்

கல்வியாளர், சிந்தனையாளர். உடன்கட்டை ஏறும் பழக்கத்துக்கு எதிராகப் போராடி, பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை நிறுவி, சாதி, மத, சமூக சீர்திருத்தங்களுக்காக உழைத்தார்.

மே 23, 2000 - உலக ஆமைகள் நாள்

ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஆமைகள், நீரிலும் நிலத்திலும் வாழும். 300 வகையான ஆமையினங்கள் உள்ளன. விரைவாக அழிந்து வருகிற ஆமை இனங்களைப் பாதுகாக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

மே 24, 1819 - விக்டோரியா மகாராணி பிறந்த நாள்

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேரரசி. 1876 முதல் 1901 வரை ஆட்சி செய்தார். 'ஐரோப்பாவின் பாட்டி' என்று மக்கள் அழைத்தனர். இவரது ஆட்சியின் ஒரு பகுதி, 'விக்டோரியா காலப்பகுதி' என அழைக்கப்படுகிறது.

மே 25, 2001 - சர்வதேச காணாமல்போன குழந்தைகள் நாள்

சர்வதேச அளவில் சராசரியாக ஒரு நாளில் 22 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர். குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களையும் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மே 27, 1962 - ரவி சாஸ்திரி பிறந்த நாள்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர். துணைக் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார். 1994இல் ஓய்வுபெற்றபிறகு, கிரிக்கெட் வர்ணனையாளர் ஆனார். அர்ஜுனா விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us