தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மே 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 29, 1917 - ஜான் எஃப். கென்னடி பிறந்த நாள்

அமெரிக்காவின் 35வது அதிபர். மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இவரது நடவடிக்கைகளால் அமெரிக்கா அதிக பொருளாதார வளத்தைக் கண்டது.

மே 29, 2001 - ஐ.நா. சர்வதேச அமைதி காப்போர் நாள்

யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்த அமைதிக் காப்பாளர்களை ஐ.நா. சபை தேர்ந்தெடுக்கிறது. அவர்களைக் கௌரவிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மே 31, 1987 - புகையிலை எதிர்ப்பு நாள்

புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்லவும் உலக சுகாதார நிறுவனம் இந்த நாளை அறிவித்தது.

ஜூன் 1, 2012 - உலக பெற்றோர் நாள்

தியாக உணர்வுடன் சுயநலம் இல்லாமல், அர்ப்பணிப்பின் அடையாளமாக பெற்றோர்கள் இருக்கிறார்கள். பெற்றோர்களைக் போற்ற ஐ.நா. சபை இந்நாளைக் கொண்டாடுகிறது.

ஜூன் 2, 2014 - தெலங்கானா நாள்

இந்தியாவின் 29வது மாநிலம். இதற்கு முன்பு ஆந்திர மாநிலத்தின் பகுதியாக இருந்தது. ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழிருந்த சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கியது.

ஜூன் 3, 1986 - ரஃபேல் நடால் பிறந்த நாள்

ஸ்பெயின், டென்னிஸ் வீரர். ஏ.டி.பி. தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us