தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜூன் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 25, 1900 - மெளன்ட்பேட்டன் பிரபு பிறந்த நாள்

ஆங்கிலக் கடற்படைத் தளபதி. பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதி, சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர். பர்மாவின் முதல் கோமகன் என்றும் அழைக்கப்பட்டார்.

ஜூன் 26, 1906 - ம.பொ. சிவஞானம் பிறந்த நாள்

விடுதலைப் போராட்ட வீரர். சிலப்பதிகாரத்தின் மீதிருந்த ஆளுமையின் காரணமாக 'சிலம்புச் செல்வர்' எனப் போற்றப்படுகிறார். தமிழக அரசு இவரது ஒருசில நூல்களை நாட்டுடைமையாக்கிச் சிறப்பித்துள்ளது.

ஜூன் 27, 1964 - பி.டி. உஷா பிறந்த நாள்

இந்தியத் தடகள வீராங்கனை. 1985, 1986இல் உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண்களில் ஒருவராக விளங்கினார். 'இந்தியாவின் தங்க மங்கை' என வர்ணிக்கப்படுகிறார்.

ஜூன் 27, 1880 - ஹெலன் கெல்லர் பிறந்த நாள்

சிறுவயதிலேயே பார்க்கும், கேட்கும், பேசும் திறன் இல்லாததால், பிரெய்லி முறையில், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு உட்பட 5 மொழிகளைக் கற்றார். எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் மாறி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பாடுபட்டார்.

ஜூன் 29, 2007 - தேசிய புள்ளியியல் நாள்

இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவர் பிரசந்த சந்திர மகலானோபிஸ் பிறந்தநாளையும் புள்ளி விவரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாளை இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

ஜூன் 30, 1912 - மாதவையா கிருஷ்ணன் பிறந்த நாள்

வன உயிரின புகைப்படக் கலைஞர், இயற்கை ஆர்வலர். தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளின் முன்னோடி. காட்டுயிர்கள் பற்றி நேரடியான கள அனுபவங்கள், ஆய்வுகளை எழுதினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us