தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஆக 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 20, 1944 - ராஜீவ் காந்தி பிறந்த நாள்

இந்தியாவின் 6வது பிரதமர். இவரது பிறந்த நாள் இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக, அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதிமொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 20, 1946 - என்.ஆர். நாராயணமூர்த்தி பிறந்த நாள்

இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தை இந்தியாவில். அறக்கட்டளை மூலமாக சமூகப் பணிகள் மேற்கொண்டு வரும் இவருக்கு பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 21, 1986 - உசேன் போல்ட் பிறந்த நாள்

தடகளப் போட்டியின் 'மின்னல் மனிதன்'. 2008, ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தூரத்தை 9.69 நொடிகளில் ஓடி, உலக சாதனை படைத்தார். 'உலகின் சிறந்த விளையாட்டு வீரர்' பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ஆகஸ்ட் 22, 2004 - சென்னை நாள்

ஆகஸ்ட் 22, 1639இல் மதராசபட்டினம் உதயமானது. சென்னையின் பாரம்பரியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ள இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 26, 1883 - திரு. வி. க. பிறந்த நாள்

கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பல துறைகளிலும் ஈடுபட்ட தமிழறிஞர். தமிழ்நடை காரணமாக 'தமிழ்த்தென்றல்' என்று அழைக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 26, 1910 - அன்னை தெரசா பிறந்த நாள்

கருணையின் உருவம்! 'பிறர் அன்பின் பணியாளர் சபை'யை நிறுவி, ஏழைகள், நோயாளிகள், அனாதைகளுக்குத் தொண்டாற்றினார். 1979இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us