PUBLISHED ON : நவ 12, 2018

நவம்பர் 12, 1896 - சலீம் அலி பிறந்த நாள்
பறவைகள் ஆராய்ச்சியாளர். தேசிய அளவில் பறவைகள் சரணாலயம் அமைப்பதில், இவரது தொண்டு மகத்தானது. 'பறவைகள் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்' என்று புகழப்பட்டார்.
நவம்பர் 14, 1889 - நேரு பிறந்த நாள்
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். இவர் பிறந்த நாள், தேசிய குழந்தைகள் நாளாகக் கொண்டாடப் படுகிறது.
நவம்பர் 15, 1942 - செ.நெ. தெய்வநாயகம் பிறந்த நாள்
தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவை, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்படுத்தினார். புகையிலை, மது ஒழிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
நவம்பர் 16, 1995 - உலக சகிப்புத் தன்மை நாள்
சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் விளைவுகளையும், சகிப்புத்தன்மையின் தேவையை எடுத்துச் சொல்லவும் யுனெஸ்கோ அமைப்பால் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.
நவம்பர் 17, 1909 - சி.இலக்குவனார் பிறந்த நாள்
தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்க் காப்புக் கழகத்தைத் தொடங்கினார். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
நவம்பர் 18, 1923 - ஆலன் ஷெப்பர்ட் பிறந்த நாள்
விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதர்; முதலாவது அமெரிக்கர். மெர்குரி விண்கலத்தில் பயணம் செய்து, மொத்தம் 15 நிமிடங்கள் பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றினார்.
