தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : டிச 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிசம்பர் 3, 1795 - ரோலண்ட் ஹில் பிறந்த நாள்

நவீன அஞ்சல் சேவையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டு ஆசிரியர். இவரது யோசனைப்படியே, தபால் வாங்கி அதில் ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

டிசம்பர் 3, 2012 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை உலக மக்கள் உணர வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை சம அளவில் வழங்க வலியுறுத்தி இந்த நாளை ஐ.நா. கடைப்பிடிக்கிறது.

டிசம்பர் 4, 1971 - இந்திய கடற்படையினர் நாள்

இந்தியக் கடற்படை, 'ஆப்பரேஷன் டிரைடன்ட்' என்ற பெயரில் பாகிஸ்தானின் கராச்சி மீது தாக்குதல் நடத்தி போரில் வெற்றி பெற்றது. இதனை நினைவுபடுத்தும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

டிசம்பர் 5, 1901 - வால்ட் டிஸ்னி பிறந்த நாள்

கேளிக்கை உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், போன்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். இவரது 26 படங்கள் ஆஸ்கார் விருது வென்றுள்ளன.

டிசம்பர் 7, 1949 - கொடி நாள்

இந்தியாவின் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்ற, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கொடி விற்பனையின் மூலம் திரட்டப்படும் நிதி வீரர்களின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

டிசம்பர் 9, 2003 - சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்

ஒரு நாட்டின் வளர்ச்சியையும் ஆட்சியையும் பாதுகாப்பையும் சீரழிப்பதாக ஊழல் இருக்கிறது. இதைத் தடுக்க ஐ.நா. அமைப்பு தீர்மானத்தை நிறைவேற்றி இந்த நாளைக் கடைப்பிடித்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us