தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!


PUBLISHED ON : டிச 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிசம்பர் 18, 1878 - ஜோசப் ஸ்டாலின் பிறந்த நாள்

சோவியத் யூனியனின் பொதுவுடைமைக் கட்சித் தலைவர். தொழிலிலும் இராணுவத்திலும் நாட்டை வல்லரசாக மாற்றினார். ரஷ்யாவில் தொழில்புரட்சி ஏற்பட இவரது பொருளாதாரத் திட்டங்களே காரணம்!

டிசம்பர் 18, 1856 - ஜெ.ஜெ.தாம்சன் பிறந்த நாள்

நவீன அணு இயற்பியலின் தந்தை! ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். 1906இல் நோபல் பரிசு பெற்றார்.

டிசம்பர் 19, 1934 - பிரதிபா பாட்டீல் பிறந்த நாள்

இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர். 'முதல் பெண் குடியரசுத் தலைவர்' என்கிற பெருமை உடையவர்! கல்வித் துறை, சுற்றுலா துறை, வீட்டுவசதித் துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார்.

டிசம்பர் 20, 2002 - ஐ.நா.சர்வதேச ஒருமைப்பாட்டு நாள்

வறுமையை ஒழிக்கவும் மனித சமூகத்துக்கு உதவவும் வேண்டும். அமைதியுடனும் செழிப்புடனும் வளரும் தலைமுறையினர் முன்னேற்றம் அடைய ஐ.நா. சபையால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 22, 1887 - சீனிவாச இராமானுஜன் பிறந்த நாள்

புகழ்பெற்ற கணிதமேதை! 3,000க்கும் அதிகமான தேற்றங்களைக் கண்டு

பிடித்தார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு துறைகளில் பயன்படுகின்றன.

டிசம்பர் 23, 1902 - சௌத்ரி சரண் சிங் பிறந்த நாள்

குறுகிய காலம் (28.7.1979 - 14.1.1980) பதவி வகித்த இந்தியாவின் 7வது பிரதமர். வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்தார். இவரது பிறந்த நாளே 'தேசிய உழவர் தினம்'.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us