sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மார் 18, 2019

Google News

PUBLISHED ON : மார் 18, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 18, 1858 - ருடால்ஃப் டீசல் பிறந்த நாள்

நீராவி இஞ்ஜினுக்கு மாற்றாக 'கம்ப்ரெஷன் இக்னிஷன்' (Compression Ignition) இஞ்ஜினைக் கண்டுபிடித்த ஜெர்மானியர். தொழில்துறை வளர்ச்சிக்கு ஆதாரமான இஞ்ஜின் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

மார்ச் 20, 2010 - உலக சிட்டுக்குருவிகள் நாள்

சுற்றுச்சூழல் காரணமாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நம்மைச் சுற்றியுள்ள உயிரியல் பல்லுயிர்த்தன்மையின் முக்கியத்துவத்தை அறிய இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் 21, 1942 - ஆதவன் சுந்தரம் பிறந்த நாள்

சிறுகதை உலகில் சாதனைகள் நிகழ்த்திய தமிழ்ப் படைப்பாளி. இளைஞர்களின் பிரச்னைகளை அதிகம் எழுதினார். 'சாகித்ய அகாதெமி' விருது இவரது மறைவுக்குப்பின் 1987இல் வழங்கப்பட்டது.

மார்ச் 22, 1992 - உலக நீர் நாள்

'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கேற்ப அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பது தண்ணீர். அதன் தேவைகள், முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்தில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் 23, 1893 - ஜி.டி. நாயுடு பிறந்த நாள்

அறிவியல் மேதை, கண்டுபிடிப்பாளர். 'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்பட்டார். விவசாயத்தில் பல சாதனைகள் புரிந்தார். கல்லூரிகளுடன் பல தொழிற்சாலைகளையும் தொடங்கினார்.

மார்ச் 24, 1992 - அனைத்துலக காசநோய் நாள்

உயிர்க்கொல்லி நோயான காசநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக சுகாதார அமைப்பால் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us