sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஆக 19, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 19, 1871 - ஆர்வில் ரைட் பிறந்த நாள்

அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். ரைட் சகோதரர்களில் மூத்தவர். முதன்முதலாக விமானத்தை இயக்கி 12 வினாடிகள் வானில் பறந்தார். அவர்கள் கண்டுபிடித்த விமானம் வாஷிங்டன் தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 19, 1839 - உலகப் புகைப்பட நாள்

டாகுரியோடைப் புகைப்பட முறையை லூயிஸ் டாகுரே அறிமுகப்படுத்தினார். இதற்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்து 'ஃப்ரீ டூ தி வேர்ல்ட்' என அறிவித்தது. புகைப்படக்கலையின் பெருமையை உணர, இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 20, 1944 - ராஜீவ் காந்தி பிறந்தநாள்

இந்தியாவின் 6வது பிரதமராக இளம் வயதிலேயே (40 வயது) ஆனார். இந்த நாள் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு, கல்வி நிறுவனங்களிலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 21, 1986 - உசேன் போல்ட் பிறந்த நாள்

தடகளப் போட்டியின் 'மின்னல் மனிதன்'. 2008இல் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தூரத்தை 9.69 நொடிகளில் ஓடி உலக சாதனை படைத்தார். 'சிறந்த உலக விளையாட்டு வீரர்' என்கிற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ஆகஸ்ட் 22, 1907 - ப.ஜீவானந்தம் பிறந்த நாள்

பொது வாழ்வில் 40 ஆண்டுகள் ஈடுபட்ட பொதுவுடைமைத் தலைவர். 'ஜீவா' என, அனைவராலும் அழைக்கப்பட்டார். கம்யூனிச இயக்கத்தில் பிரபலமானவராகவும் 'ஜனசக்தி' இதழ் ஆசிரியராகவும் இருந்தார்.

ஆகஸ்ட் 22, 2004 - சென்னை நாள்

ஆகஸ்ட் 22, 1639இல் மதராசபட்டினம் உதயமானது. இதை மையமாக வைத்து, சென்னை நகரின் பாரம்பரியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ள இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us