தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : செப் 09, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்டம்பர் 9, 1828 - லியோ டால்ஸ்டாய் பிறந்த நாள்

ரஷ்ய நாவலாசிரியர். ஏராளமான கதைகள், நாவல்கள், நாடகங்களைப் படைத்துள்ளார். 'வார் அண்ட் பீஸ்' நாவல் உலகப் புகழ் பெற்றது. இவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

செப்டம்பர் 9, 1941 - டென்னிஸ் ரிட்சி பிறந்த நாள்

அமெரிக்க கணினி அறிவியலாளர். சி (C) நிரலாக்க மொழியை உருவாக்கினார். பொறியாளர்களுடன் இணைந்து யுனிக்ஸ் (UNIX) இயங்குதளத்தை உருவாக்கவும் உதவினார்.

செப்டம்பர் 10, 2003 - உலக தற்கொலைத் தடுப்பு நாள்

தற்கொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கம். சர்வதேச தற்கொலைத் தடுப்பு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

செப்டம்பர் 11, 1862 - ஓ.ஹென்றி பிறந்த நாள்

உலகப் புகழ்பெற்ற ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளர். கேலிச்சித்திர ஓவியர். இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர். இவரது கதைகள் எதிர்பாராத முடிவுகளுடன் தனித்துவமாக இருக்கும்.

செப்டம்பர் 15, 1861 - மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா பிறந்த நாள்

புகழ்பெற்ற பொறியாளர். 'இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்' என்ற நூலை எழுதினார். 1955இல் 'பாரத ரத்னா' விருது பெற்றார். இந்த நாள் இந்தியாவில் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 15, 2007 - அனைத்துலக மக்களாட்சி நாள்

அரசியல், சமூக, கலாசாரங்களை அனுபவிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றுக்குக் கௌரவத்தைக் கொடுக்க ஐ.நா. சபை இந்த நாளை அனுசரிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us