தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்

மொக்கை முன்னா ஷார்ப் சங்கர்


PUBLISHED ON : மே 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கர்: என்னடா முன்னா, கறுத்துப் போயிட்ட? நம்ம ஃப்ரெண்ட்ஸ் யாருக்கும் உன்னை அடையாளம் தெரியாது. ஹஹ்ஹா...

முன்னா: அவ்வளவு அழகாவா இருக்கேன்! ஏய் வெயிலே... உனக்கு நன்றி.

ச: டேய்! சமாளிக்காத. என்ன சொன்னாலும் வெயில்ல அலையிறதை நிறுத்த மாட்டே, இல்ல?

மு: நான் என்ன செய்ய? வெயிலுக்குப் பயந்தா நிம்மதியா ஊர் சுத்த முடியுமா?

ச: நம்ம ஊர்லயே 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெயில் கொளுத்திட்டு இருக்கு. நீ என்னடான்னா வெயிலப் பார்த்து பயம் இல்லன்னு சொல்ற.

மு: ஓ... இவ்வளவு உக்கிரமா வெயில் அடிக்குதா? சூரியனுக்கு என்னாச்சு? திடீர்னு இவ்ளோ வெப்பத்தை பூமிக்கு ஏன் அனுப்புது?

ச: சூரியன் நல்லாத்தான் இருக்குது. தூசி, புகையால காற்றில் கலக்கிற கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகமாகிருச்சு. அதனால, பருவநிலை மாறி அதிகபட்ச வெயில் நம்மைத் தாக்குது.

மு: அடச்சே! இதுக்கும் நாமதான் காரணமா? அப்படின்னா, சும்மா இருந்த சூரியனை சூடாக்கிவிட்டுட்டு இப்போ அனுபவிக்கிறோம்.

ச: வெயிலோட உஷ்ணம் அதிகமா இருக்குற கடுங்கோடைக் காலத்தை 'அக்னி நட்சத்திரம்'ன்னு சொல்றாங்க. ஆனாலும், அதவிடக் கடுமையான வெயில்தான் இப்போ கொளுத்துது.

மு: அக்னி என்றால் நெருப்புதானே... ஆனாலும் நெருப்பைவிட அதிகமாச் சுட்டெரிக்குதே. இப்படியே போனால் எப்படி? இதுக்குத் தீர்வு என்ன?

ச: ஒரே தீர்வு, மரங்களை அதிகமா வளர்க்குறதுதான். பசுமைத் தோட்டங்களை அமைக்கணும். காடுகளோட பரப்பளவை அதிகரிக்கணும்.

மு: இவ்வளவுதானே? அப்படின்னா உடனே மரங்களை வளர்த்து, சூரியனை கூல் பண்ணிருவோம்.

ச: அப்படின்னா புகை மற்றும் மாசுகளை என்ன செய்வே? பழைய வாகனங்கள்ல இருந்துதான் அதிக புகை வருது தெரியுமா?

மு: அப்படின்னா அந்த வாகனங்களோட உரிமங்களை ரத்து செஞ்சு, ஓட்டுவதைத் தடை பண்ணணும். வாயு மூலமா இயங்குற வாகனங்களை அதிகரிக்கணும்.

ச: பரவால்லையே... வெயில் உன்ன ஷார்ப் ஆக்கிருச்சே!

மு: அப்படியா சொல்றே... ஹி... ஹி...

ச: அதுக்காக இன்னும் ஷார்ப் ஆகணும்னு சொல்லி வெயில்ல சுத்திக்கிட்டே இருக்காதே.

மு: நான் கறுத்துப் போகக்கூடாதுன்னு, நல்ல கருத்துச் சொல்ற. கேட்டுதானே ஆகணும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us