தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒரு செடியில் ஒரே பூ

ஒரு செடியில் ஒரே பூ

ஒரு செடியில் ஒரே பூ


PUBLISHED ON : மே 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலையில் கிழக்கு நோக்கும். மதிய நேரத்தில் நேராய் வான் நோக்கும். மாலையில் மேற்கை நோக்கும். சூரியன் மறைந்ததும் தலையைத் தொங்கப்போட்டு நிற்கும். இப்படிப்பட்ட சூரிய காந்தியின் பல்வேறு பாவனைகளைப் பார்த்து இருக்கிறீர்களா?

இப்படி சூரியன் போகும் திசையெல்லாம் போவதால்தான் அதற்கு சூரிய காந்தி என்று பெயர் என்பது உங்கள் எல்லாருக்குமே தெரியும். மேலும் சில தகவல்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இதன் அறிவியல் பெயர் ஹீலியாந்தஸ் (Helianthus). கிரேக்க மொழியில் ஹீலியா சூரியனையும், ஆந்தஸ் பூவையும் குறிக்கும். சூரிய காந்தியின் தாயகம் வட அமெரிக்கா. ரஷ்யாவின் தேசிய மலர். சூரிய காந்தி எண்ணெயில் கால்சியம், கொழுப்பு உட்பட பல்வேறு விதமான சத்துகள் அடங்கி உள்ளன.

ஒரே பூ போல் தோற்றம் தரும் சூரிய காந்தியில் நிறைய குட்டிக் குட்டிப் பூக்கள் இருக்கின்றன. சுமார் 1000 முதல் 2000 குட்டிப் பூக்கள் இணைந்ததுதான் ஒரு பெரிய சூரிய காந்தி. இதன் விதைகளைப் பறவைகள் உணவாக எடுத்துக்கொள்கின்றன. சூரிய காந்தியில் பல வகை உண்டு.

ஜெர்மனியில் நார்டின் வெஸ்ட்பாலேன் (Nordrhein Westfalen) என்னும் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ஒரு சூரிய காந்திச் செடி (2014) மரம் அளவுக்கு உயர்ந்து வளர்ந்தது. எவ்வளவு உயரம் தெரியுமா? 9.17 மீட்டர் உயரம். ஒரு பூச்செடி இவ்வளவு உயரம் வளர்வது ஆச்சர்யமாக இருக்கிறது, அல்லவா?

ஒரு வேளை சூரியனை தொட்டு விடும் ஆசையில் வளர்ந்து ஓடியதோ அந்தச் செடி?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us