தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பளபள பட்டாடைகள்

பளபள பட்டாடைகள்

பளபள பட்டாடைகள்


PUBLISHED ON : ஜூன் 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கி.மு. 2700ஆம் ஆண்டில் சீன அரச குடும்பத்தினர்தான் பட்டு (Silk) என்கிற துணி வகையை முதன் முதலில் கண்டறிந்தார்கள். பின்னர் பட்டாடைகளை உற்பத்தி செய்தார்கள். அதை ரகசியமாகவும் வைத்திருந்தார்கள். பிற்காலத்தில் அது படிப்படியாக உலகம் முழுக்கப் பரவியது. சீனர்கள்தான் இன்றும் பட்டு உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறார்கள். இந்தியா இரண்டாமிடம். உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, ஜப்பான், கொரியா, வியட்நாம், ஈரான் போன்ற நாடுகளும் பட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அளவில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா, தமிழகம் அடுத்தடுத்த இடங்கள்.

அழகும், மென்மையும் மிகுந்த பட்டாடைகள் தமிழகத்திலும் இந்தியாவின் பிற ஊர்களிலும் நெய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வேட்டி, சேலைகள் பட்டில் தயாரிக்கப்படுகின்றன.

விழாக்கள், திருமணம் போன்ற சடங்குகளில் பட்டாடைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கெளரவத்தின் அடையாளமாகவும், செல்வச் செழிப்பைக் காட்டக்கூடியதாகவும் பட்டு கருதப்படுகிறது. மற்ற ஆடைகளைவிட விலை கூடுதலானது. தங்க, வெள்ளி சரிகை கொண்டும் பட்டாடைகள் நெய்யப்படுகின்றன.

பட்டுப்புழு வளர்க்கும் முறை: பட்டு நூல் பட்டுப்புழுவின் கூட்டில் இருந்து பெறப்படுகிறது. அதற்காக புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. பட்டுப்புழு வளர்ப்பு / செரிகல்சர் (sericulture) என்று அழைக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us