sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

ஆச்சரியமூட்டும் ஆழ்கடல் ஓடங்கள்

/

ஆச்சரியமூட்டும் ஆழ்கடல் ஓடங்கள்

ஆச்சரியமூட்டும் ஆழ்கடல் ஓடங்கள்

ஆச்சரியமூட்டும் ஆழ்கடல் ஓடங்கள்


PUBLISHED ON : டிச 04, 2023

Google News

PUBLISHED ON : டிச 04, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆழ்கடலில் உள்ள அதீத அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்கும் அதிநவீன ஓடங்களில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று, கடலின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்படும் கப்பல். மற்றொன்று கடலின் அடியாழம்வரை செல்லும் நீர்மூழ்கி ஓடம். மேலே உள்ள கப்பல், நீர்மூழ்கி ஓடத்தைக் கண்காணிக்கவும், அதனைக் கடலின் நடுவே சுமந்து செல்லவும் உதவும். இதில் விஞ்ஞானிகள் பலர் பணியில் இருப்பார்கள்.

நீரில் மூழ்கும் சிறிய ஓடத்தில் அதிநவீன வசதிகளான வியூவிங் டெம்பர்டு கிளாஸ், சோனார், ரேடார், அண்டர்வாட்டர் கேமிரா, 40 கார்களின் ஹெட்லைட் திறன் கொண்ட விளக்கு உள்ளிட்டவைப் பொருத்தப்பட்டிருக்கும். உள்ளே பயணிகள் அமர இருக்கைகள், மின்சாதனங்கள் இயங்க மின்வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இந்த ஓடம் கடலின் அடியாழம்வரை செல்லக்கூடியது. இது ஒரு பயணிகள் கார் அளவு கொள்ளளவு கொண்டிருக்கும்.

சமீபத்தில் 'ஓஷன் கேட் டைட்டன்' என்ற நீர்மூழ்கி ஓடம் டைட்டானிக் கப்பலைக் காணச் சென்று, நசுங்கி, அதில் பயணம் செய்த ஐந்து பயணிகளும் பலியாயினர். கடலின் அடியாழத்தில் நீரின் அழுத்தத்தைத் தாங்கும் வகையிலேயே இந்த ஓடம் தயாரிக்கப்பட்டு இருந்தது.இந்த ஓடம் போதிய கால இடைவெளியில் பராமரிக்கப்படாமல், ஆழ்கடல் சுற்றுலாவுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டது தவறு.

சரியாக தரச்சோதனை செய்யப்படாத 'ஓஷன் கேட் டைட்டன்,' கடலின் அடியாழத்தில் நீரின் அழுத்தத்தால் விநாடிக்கும் குறைவான நேரத்தில் நசுங்கியது. இதனால், உள்ளே இருந்த பயணிகள் அதிவேகத்தில் நசுக்கப்பட்டு அவர்களது உடல் மாவுபோல் கடலில் கரைந்து போயின. மரணத்தை உணரும் முன்னரே அவர்கள் மரணம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us