தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நீந்தும் பசுக்கள்!

நீந்தும் பசுக்கள்!

நீந்தும் பசுக்கள்!


PUBLISHED ON : அக் 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கையை நாம் பாதுகாக்கத் தவறியதாலும், உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல் பருவநிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் மாசுபட்டதாலும் பல உயிரினங்கள் அழிந்துவிட்டன. அப்படி அழிந்த ஓர் உயிரினம்தான் பிரமாண்டமான 'ஸ்டெல்லர் கடல் பசுக்கள்' (Steller Sea Cow). கடலில் பசுக்களா… ஆச்சரியமாக இருக்கிறதா! பார்ப்பதற்கு பசுக்களைப்போல இருப்பதால், இவற்றிற்கு இந்தப் பெயர். வடக்கு பசிபிக் கடல் பகுதியில் இவை அதிகம் காணப்பட்டன. 'ஜார்ஜ் வில்ஹெம் ஸ்டெல்லர்' (George Wilhem Steller) என்பவர் 1741 ஆம் ஆண்டில் கமாண்டர் தீவுகள் பகுதியில் இப்படி ஒரு உயிரினம் இருப்பதைப் பார்த்து தெரிவித்தார். அவருடைய பெயரே இந்தக் கடல் பசுக்களுக்கு வைக்கப்பட்டுவிட்டது. சரி, ஏன் இந்த உயிரினம் அழிந்தது என்ற காரணத்தைப் பார்ப்போம். கடல் பயணம் மேற்கொள்கிறவர்கள் இதன் இறைச்சியை உணவுக்கு எடுத்துக்கொண்டு, தோலைப் படகுகள் செய்யப் பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு விளக்கு எரிக்கப் பயன்பட்டது. இப்படி அதிக அளவில் வேட்டையாடப்பட்டு கண்டறியப்பட்ட 27 ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்து போனது ஸ்டெல்லர் கடல் பசு இனம்.

உடல் அமைப்பு

இவற்றிற்கு பற்கள் கிடையாது. அதற்குப் பதில் மேல், கீழ் வரிசைகளில் இரண்டு தட்டையான வெள்ளை நிற எலும்புகள் இருக்கும். அதிக எடை காரணமாக, ஐந்து நிமிடங்களுக்கு மேல் இவற்றால் தண்ணீரில் மூழ்கி இருக்க முடியாது. அதனால் அடிக்கடி மேலே வந்து செல்லும். மிகவும் அமைதியான இந்த உயிரினத்தால், வேகமாக நீந்தவும் முடியாது. இதனால் எளிதில் வேட்டையாடப்பட்டுவிடும்.

ஸ்டெல்லர் கடல் பசு (Steller Sea Cow)

* எடை - 10 டன்

* நீளம் - 30 அடி

* உணவு - கடல் பாசி, கடற் புற்கள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us