உள்ளடக்கத்திற்கு செல்ல

எச்சரிக்கைக் கருவி மூலம் விபத்தை தடுக்கும் வாலிபர்
எச்சரிக்கைக் கருவி மூலம் விபத்தை தடுக்கும் வாலிபர்
PUBLISHED ON : செப் 12, 2016

அ நிறம் | அளவு
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த தன்னார்வலர் முரளி. இவர், சாலை விபத்துகளைத் தடுக்கும் தானியங்கி எச்சரிக்கைக் கருவியைத் தயாரித்துள்ளார். சூரிய மின் தகடுகளால் செயல்படும் இந்தக் கருவியின் உச்சியில், விட்டுவிட்டு ஒளிரும் சிவப்பு நிற எல்.இ.டி., விளக்குகளும், எச்சரிக்கை வாசகங்களைத் தொடர்ந்து ஒலிக்கும் ஒலிப்பான்களும் பொருத்தப்பட்டுள்ளன. தூரத்தில் வரும்போதே வாகன ஓட்டிகளை, ஒளிரும் எல்.இ.டிக்களும், 'இது விபத்துப் பகுதி! மெதுவாகச் செல்லுங்கள்!' போன்ற எச்சரிக்கை ஒலிகளும், சுதாரிக்க வைக்கின்றன. வழக்கமாக விபத்துகள் நேரிடும் பகுதியில் இந்தக் கருவியை நிறுவி, உயிரிழப்புகளைத் தடுத்து வருகிறார் முரளி.
