PUBLISHED ON : ஆக 18, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு ஒரு கேள்வியில் நான்கு தாவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றவற்றுடன் தொடர்பற்றது. அதைக் கண்டுபிடியுங்கள்.
1. அ) இஞ்சி
ஆ) ஏலக்காய்
இ) கிராம்பு
ஈ) பட்டை
2. அ) துளசி
ஆ) வேம்பு
இ) ஆலமரம்
ஈ) நெல்லி
3. அ) உருளைக்கிழங்கு
ஆ) கேரட்
இ) முள்ளங்கி
ஈ) முட்டைக்கோஸ்
4. அ) தாமரை
ஆ) அல்லி
இ) ஹைட்ரில்லா
ஈ) சப்பாத்திக் கள்ளி
விடைகள்:
1.அ) இஞ்சி. இது ஒரு கிழங்கு, மற்றவை தாவரத்தின் பிற பாகங்கள், மசாலாப் பொருட்கள்.
2. இ) ஆலமரம். இது மற்ற தாவரங்களைப் போல பெரும்பாலும் மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுவதில்லை. இது ஒரு பெரிய, நிழல் தரும் மரமாகும்.
3. ஈ) முட்டைக்கோஸ் இது தாவரத்தின் இலைப்பகுதி. மற்றவை வேர் பகுதிகள்.
4. ஈ) சப்பாத்திக் கள்ளி இது பாலைவளத் தாவரம், மற்றவை நீர்வாழ் தாவரங்கள்.