PUBLISHED ON : ஜூன் 27, 2016

சின்னச் சின்ன சிலந்திகளைப் பார்த்திருப்போம்! மயில் போல ஆடுகிற வண்ணமயமான சிலந்தியைப் பற்றித் தெரியுமா? அதுதான் மயில் சிலந்தி (Peacock Spider). மயில் போல வண்ணங்களையும், அதைப்போலவே அழகாக ஆடுவதாலும் இதற்கு இந்தப் பெயர் வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே இவை காணப்படுகின்றன. இந்த மயில் சிலந்தியைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. இவை கடிக்காது. இந்தச் சிலந்திகளால் மனிதனுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. உருவத்தில் சிறியதாக இருக்கும் இந்தச் சிலந்திகள் மயில் போல அழகாக ஆடும். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் போன்ற நிறங்கள் இதன் முதுகுப் பகுதியில் காணப்படுகின்றன. தன் மூன்று ஜோடிக் கால்களையும் உயர்த்தி ஆடும். தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆடக்கூடியவை,
மயில் சிலந்தி
உயிரியல் வகைப்பாடு
திணை : விலங்கு
தொகுதி : கணுக்காலிகள்
வகுப்பு : சிலந்தித் தேள்
வரிசை : அரனியா (Aranea)
