sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

உயரே பறந்து உயர்ந்தவர்கள்!

/

உயரே பறந்து உயர்ந்தவர்கள்!

உயரே பறந்து உயர்ந்தவர்கள்!

உயரே பறந்து உயர்ந்தவர்கள்!


PUBLISHED ON : மே 30, 2016

Google News

PUBLISHED ON : மே 30, 2016


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்கள் சாதிக்காத துறையே இன்றைக்கு இல்லை! ஆனால், அந்தச் சாதனை அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. கடும் உழைப்பும், முயற்சியும் தேவைப்பட்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் சாதித்ததைப் போலவே வானவியல் துறையிலும் பெண்கள் சாதித்திருக்கிறார்கள். வானவியல் துறையில் சாதித்த 'முதல்' பெண்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

1906 லிலியன் டோட் (E. Lilian Todd) (அமெரிக்கா) விமான வடிவமைப்பு, கட்டுமானப்பணியில் ஈடுபட்ட முதல் பெண்

1908 தெரசே பெல்ட்டியர் (Therese peltier) (ஃபிரான்ஸ்) விமானத்தில் தனியாகப் பறந்த முதல் பெண்

1910 பாரொனெஸ் ரேமாண்ட் டி லோரோசே (ஃபிரான்ஸ்) விமானி உரிமம் (Pilot License) பெற்ற முதல் பெண்

1911ஹாரியட் கும்பி (அமெரிக்கா) விமானி உரிமம் (Pilot License) பெற்ற முதல் பெண்

1916 ரோசி ஃபாரர் (Rosie Farrar) (அமெரிக்கா) போயிங் (Boeng) விமானத்தில் பணியில் சேர்ந்த முதல் பெண்

1927 போபி ஆம்லி (Phoebe Omlie) (அமெரிக்கா) விமான இயந்திரப் பொறியாளர் உரிமம் (Aircraft Mechanic) பெற்ற முதல் பெண்

1928 எமிலியா ஏர்ஹர்ட் (Amelia Earhart) (அமெரிக்கா) அட்லாண்டிக் கடலை விமானம் மூலமாகக் கடந்த முதல் பெண்

1929 பாபி ட்ரூட் (Bobbi Trout) (அமெரிக்கா) பறக்கும் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிய (Inflight Aerial Refueling) முதல் பெண்

1929 பஞ்சோ பார்ன்ஸ் (Pancho Barnes) (அமெரிக்கா) திரைப்பட விமான சண்டைக்காட்சியில் பங்கேற்ற முதல் பெண் விமானி

1938 ஹன்னா ரெய்ட்ஷ் (Hanna Reitsch) (போலந்து) ஹெலிகாப்டர் இயக்கிய முதல் பெண்

1942 மேரி வான் சியோக் (Mary Van Scyoc) (அமெரிக்கா) முதல் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Traffic Controller)

1943 'ரோசி தி ரிவட்டர்' (Rosie the Riveter) இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வானவியல் துறை உள்பட பல்வேறு துறைகளில் பெண்கள் இடம்பெறத் துவங்கினர். அதைக்குறிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பிரபல சின்னம்.

1953 ஜாகுலின் கோச்ரான் (Jaquelin Cochran) (அமெரிக்கா) விமான ஒலித்தடை (Sound Barrier) உருவாக்கிய முதல் பெண்

1973 அமெரிக்கக் கடற்படை பெண்களுக்கான விமானி பயிற்சியை (Pilot Training) தொடங்கியது.

1980 லின் ரிப்பெல்மேயர் (Lynn Ripplemeyer) (அமெரிக்கா) போயிங் 747 ரக விமானம் ஓட்டிய முதல் பெண் விமானி

1995 ஈலீன் காலின்ஸ் (Eileen Collins) (அமெரிக்கா) முதல் பெண், விண்கல விமானி (Space Shuttle Pilot)

2001 பாலி வாசெர் (பிரிட்டன்) (Polly Vacher) சிறிய விமானத்தில் உலகம் முழுவதும் பறந்த முதல் பெண்

2012 லியூ யாங் (Liu Yang) (சீனா) சீனாவின் முதல் பெண் விண்வெளி வீரர்

இந்தியா

1936 சரளா தாக்ரல் (Sarla Thakral) விமானி உரிமம் பெற்ற முதல் பெண்

1947 பிரேம் மாதுர் (Prem Mathur) உள்நாட்டு வணிக விமானங்களில் விமானியாகப் பணிபுரிந்த முதல் பெண்

1956 துர்பா பானர்ஜி (Durba Bannerjee) இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் விமானி

1985 சௌதாமினி தேஷ்முக் (Soudamini Deshmukh) முதல் முதலாக முழுக்கவும் பெண்களே பணி புரிந்த விமானத்தின் முதல் பெண் தலைமை விமானி

1994 ஹரிதா கவுர் தியோல் (Harita Gaur Deol) இந்திய விமானப்படை விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் விமானி

1997 கல்பனா சாவ்லா (Kalpana Chawla) முதல் இந்தியப் பெண் விண்வெளி வீரர்

2002 பத்மாவதி பண்டோபாத்யாய (Padmavathy Bandopadhyay) இந்திய விமானப்படையின் முதல் பெண் துணைத் தளபதி (Vice Marshall)






      Dinamalar
      Follow us