sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/நான் யார்?

நான் யார்?

நான் யார்?


PUBLISHED ON : மே 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உழைப்பாலும் அனுபவத்தாலும் புகழ் பெற்ற சகோதரர்கள் நாங்கள். 'நாங்கள் என்று சொல்கிறேனே என்று நினைக்கிறீர்களா?' என்னைப் பற்றி மட்டும் தனியாகச் சொல்ல முடியாது. சாதனை, புகழ் என எல்லாவற்றிலும் என் சகோதரருக்கும் பங்கு உண்டு. எடிசனைப்போல நூற்றுக்கணக்கில் சாதனங்களை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும், எங்கள் கண்டுபிடிப்பு வானளாவிய புகழ் பெற்றது!

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான இண்டியானாவில் உள்ள மெல்வில்லி என்ற இடத்தில் நான் பிறந்தேன். என் சகோதரன் பிறந்தது ஒஹையோவில் உள்ள டேய்டன் என்ற இடம். நாங்கள் இருவரும் பள்ளி மற்றும் உயர்கல்வி படித்து முடித்து 1889ஆம் ஆண்டு 'வெஸ்டன் நியூஸ்' என்ற வார இதழைத் தொடங்கினோம். அதை 1890ல் 'தி ஈவினிங் ஐட்டம்' என்று பெயர் மாற்றி நாளிதழாக வெளியிட்டோம்.

இயந்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் எங்களுக்கு அதிக ஈடுபாடு இருந்தது. அதனால், சைக்கிள்கள் உற்பத்தி செய்வது, பழுது பார்ப்பது, விற்பனை செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டோம். இதில்தான் ஆய்வுக்குத் தேவையான பணமும் எங்களுக்குக் கிடைத்தது.

வானவூர்தி ஒன்றை அமைப்பதற்கு முன், அது பறப்பதற்கு என்ன தேவை? என்பதைக் கற்றுக்கொள்ள நினைத்தோம். அதற்காக, எங்களுக்கு முன்பு அந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர்களின் கட்டுரைகள், நூல்களை ஆர்வமுடன் படித்தோம்.

முதலில் நாங்கள் இயந்திரமில்லாத பொம்மை விமானங்களில் காற்றாடி மற்றும் பல்வேறு வடிவமுள்ள சிறகுகளைப் பயன்படுத்திப் பரிசோதித்தோம். அந்தச் சோதனைகளின் அடிப்படையில்தான் பறவைகளின் சிறகு போன்று, விமான இறக்கைகளை அமைத்தோம்.

எங்களுடைய கடின உழைப்பால் பறக்கும் விமானத்தை வடிவமைப்பதில் வெற்றி பெற்று, விமானிக்கான திறன்களையும் வளர்த்துக்கொண்டோம். எங்களுடைய முதல் விமானம் 1903, டிசம்பர் 17ல் பறந்து இருபதாம் நூற்றாண்டின் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.

அதற்கு நாங்கள் வைத்த பெயர் 'ப்ளையர்'. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள 'கிட்டி ஹாக்' என்ற இடத்தில் வானில் பறந்து விமானம் பறக்கும் திறனை நிருபித்தோம். அதனால், எங்களுடைய புகழும் விமானம்போல உயரப் பறந்தது என்றால் வியப்பில்லை!

வில்பர் ரைட் (Wilbur Wright)

பிறப்பு: ஏப்ரல்e 16, 1867

மறைவு: மே 30, 1912


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us