தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சதி ஒழித்த ராஜா

சதி ஒழித்த ராஜா

சதி ஒழித்த ராஜா


PUBLISHED ON : மே 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜா ராம்மோகன் ராய் பிறந்த தினம் மே 22

கணவன் இறந்தால், கூடவே மனைவியையும் நெருப்பில் தள்ளிக் கொன்றுவிடும் கொடிய வழக்கம் அவலம் இந்தியாவில் இருந்தது. 'சதி' அல்லது 'உடன்கட்டை ஏறுதல்' என்ற இந்த வழக்கத்தை ஒழிக்கப் போராடி வென்றவர் ராஜா ராம்மோகன் ராய்.

பெண்கள் கல்விக்காகவும் கணவனை இழந்த இளம் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும்கூடக் குரல் கொடுத்தவர் ராம்மோகன் ராய். ஆண்கள், பல பெண்களைத் திருமணம் செய்துகொள்வதை எதிர்த்தார். சமூக மறுமலர்ச்சிக்காக 'பிரம்ம சமாஜம்' என்ற அமைப்பு இவர் உருவாக்கியதே.

மேற்கு வங்கத்தில் பிறந்த ராம்மோகனுக்கு, வங்கம், சமஸ்கிருதம், அரபி உட்பட ஒன்பது மொழிகள் தெரியும். சிறந்த எழுத்தாளர். அவரது நூல்களில் ஒன்று 'கிப்ட் ஆஃப் த மோனோதேயிஸ்ட்ஸ்' (Gift of Monotheists).

'பெங்கால் கெஜட்' (Bengal Gazette), 'மிராதுல் அக்பர் ' (Miratul-Akbar), 'சம்பத் கெளமுதி' (Sambad Kaumudi) ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us