தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ரோஜாக்களின் தேசம்

ரோஜாக்களின் தேசம்

ரோஜாக்களின் தேசம்


PUBLISHED ON : செப் 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூக்களை பார்க்கவும் ரசிக்கவும் பிடிக்கும். அதிலும் பல்வேறு வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாப் பூவை நிறையவே பிடிக்கும். அழகிற்காகவும், பயன்பாட்டிற்காகவும், வணிகப்பொருளாகவும் பயிர் செய்யப்படுகிறது.

உலகில் 100க்கும் அதிகமான வகைகள் ரோஜாக்களில் உண்டு. ரோஜா பூக்களின் தாயகம் ஆசியா. ஒரு சிலவற்றுக்கு மட்டும் வட அமெரிக்கா, ஐரோப்பா தாயகமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட கலப்பினம் செய்யப்பட்ட ரோஜாவில் டீ ரோஜா (Hybrid Tea Roses) மிகப் பிரபலமானது. ரோஸ் என்ற பெயர் பிரெஞ்ச் மொழியிலிருந்து வந்தது. ரோஸா என்பதற்கு லத்தீன் மொழியில் அன்பு (Love) என்று பொருள்.

இது மிகவும் தொன்மையானது. சுமாராக நாலு கோடி (40 மில்லியன்) வருடங்களுக்கு முந்தைய இதன் படிமத்தை அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கண்டறிந்துள்ளனர். தி கதீட்ரல் ஆஃப் ஹில்டிசியம் (The Cathedral of Hildesheim) என்று ஜெர்மனியில் ஒரு தேவாலயம் இருக்கிறது. இங்கு இருக்கும் ரோஜா செடியின் ஆயுள் 1000 வருடங்கள். இப்பொழுதும் பூத்த வண்ணம் இருக்கிறது.

இதன் இதழ்களிலிருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. பன்னீர், ரோஸ் எசன்ஸ், சிரப், குல்கந்து போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மென்மையும் மிருதுவும் கொண்ட ரோஜா இதழ்களை அப்படியே பிய்த்தும் சாப்பிடலாம்.

எகிப்திய அழகி கிளியோபாட்ரா, புத்தாண்டின் வருகைக்காக அவர் அரண்மனையின் அறையெங்கும் தரை முழுவதும் ரோஜாக்களைப் பரப்பி வைப்பாராம். ஒவ்வொரு ரோஜாவின் நிறத்திற்கும் ஓர் அர்த்தம் சொல்லப்படுகிறது.

கலப்பின ரோஜாக்களில் ஜூலியட் என்ற வகை உலகிலேயே அதிக விலை உயர்ந்தது. இந்தப் பூவை 2006 ஆம் வருடம் அறிமுகப்படுத்தினார்கள். உலகிலேயே பெரிய ரோஜா செடி 'லேடி பேங்க்சியா' வகை (Lady Banksia ) ஆகும். இது 2,00,000 பூக்கள் வரை பூக்கக் கூடியது.

ரோஜா பெரும்பாலும் குறைந்தது ஐந்து இதழ்கள் கொண்டிருக்கும். ஆனால், ரோசா செரிசியா (Rosa Sericea) என்ற வகை மட்டும் நான்கு இதழ்கள் கொண்டது. இந்த வகை இமாலயப் பகுதியில் காணப்படுகிறது. ரோஜா பூ உற்பத்தியில் நெதர்லாந்து முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 'ரோஸ்' என்கிற பெண் பெயர்கள் அதிகம். இங்கிலாந்தின் தேசிய மலராகவும் ரோஜா உள்ளது.

பல்வேறு வண்ண ரோஜாக்களை ஒட்டுதல் செய்தும் நீல வண்ண ரோஜா கிடைக்காமலே இருந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு அந்தச் சோதனை நிறைவேறி நீலப் பூ பூத்தது. ரோஜாப் பூவுடன் கூடவே முட்கள் இருக்கும். அந்த முட்கள் (thorns) தோலினுடைய வெளி வளர்ச்சியாகும். கறுப்பு ரோஜா உண்மையிலேயே கறுப்பு நிறமல்ல, அது அடர்ந்த சிவப்பு நிறம் (dark red). ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள ரோஜா தோட்டம் இந்தியாவிலேயே மிகப் பெரியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us