sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

இசைக்கும் குருவி

/

இசைக்கும் குருவி

இசைக்கும் குருவி

இசைக்கும் குருவி


PUBLISHED ON : ஆக 19, 2019

Google News

PUBLISHED ON : ஆக 19, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருப்பு வெள்ளைக் குருவி

ஓரியண்டல் மாக்பை ராபின் (Oriental Magpie robin)

காணப்படும் இடங்கள்: இந்தியத் துணைக் கண்டம்

அளவு: 19 செ.மீ. நீளம்.

காணப்படும் மாதங்கள்: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் பறவை இனம். நம்முடைய வீட்டுத் தோட்டங்களிலும், காடுகளிலும் எளிதில் காண முடியும். இப்பறவை எழுப்பும் ஒலி, காதுகளுக்கு இனிமையான இசை.

இனிய குரலைக் கொண்டிருக்கும் இந்தப் பறவை காலை வேளையில், சுறுசுறுப்புடன் ஒலி எழுப்பும். இதைவைத்து, இந்த வகைக் குருவியை எளிதில் அடையாளம் காண முடியும். மரங்கள், மின் கம்பங்கள் போன்ற இடங்களில் இருக்கும்.

நம்முடைய வீட்டுத்தோட்டங்களில் அதிக மரங்கள் இருந்தால், குறிப்பாக, கல்யாண முருங்கைச் செடி இருந்தால், நிச்சயம் இந்தப் பறவை இருக்க வாய்ப்புண்டு. 7 செ.மீ. அளவு கொண்ட இதன் வாலை எப்போதும் தூக்கியபடி நிற்கும் இயல்புடையது.

ஆண் பறவையின் தலைப்பகுதி அடர்த்தியான கருப்பு நிறத்திலும், வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

பெண் பறவையின் தலைப்பகுதி சாம்பல் நிறத்திலும், வயிற்றுப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.






      Dinamalar
      Follow us