தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/கனவுகளை விதைத்தவர்

கனவுகளை விதைத்தவர்

கனவுகளை விதைத்தவர்


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் ஜூலை 27

15.10.1931 - 27.07.2015


ராமேஸ்வரம் கடற்கரையோரம். வானத்தில் பறக்கும் கொக்கு, சீகல் பறவைகளைப் பார்த்தபடி நின்றான் ஒரு சிறுவன். பறவைகள் பறப்பதைப் பார்த்து தானும் ஒரு நாள் அது போல் பறக்க வேண்டும் என்ற ஆசை அந்தச் சிறுவனின் மனதில் சிறகசைத்தது.

அந்தச் சிறுவனின் தந்தை ராமேஸ்வரம் கடலில் படகு சவாரி விட்டு குடும்பம் நடத்துபவர். பள்ளிப் படிப்பு நேரம் போக, பத்திரிகைகளை விநியோகிக்கும் வேலையைப் பார்த்தார். குடும்பத்தினர் நடத்தும் மளிகைக் கடைக்குப் போய் கெளரவம் பார்க்காமல் பொட்டலம் மடிக்கும் வேலையும் பார்த்தார்.

ஆனாலும், பறக்கும் கனவு மனதில் கனன்றுகொண்டே இருந்தது. மேல்படிப்புக்கு சென்னை எம்.ஐ.டி-க்கு விண்ணப்பித்தார். அனுமதி கிடைத்தது. ஆனால் ஃபீஸ் கட்டப் பணம் இல்லை. அவர் சகோதரி, தன் நகைகளைக் கொடுத்து தம்பியை படிக்க அனுப்பிவைத்தார்.

'சிக்கல்களைப் பார்த்து அஞ்சாமல் இருப்பதுதான் எந்த நெருக்கடியிலும் எடுத்த வேலையை முடிக்கும் மன உறுதியைக் கொடுக்கும்' என்பதை எம்.ஐ.டி. யில் படிக்கும் காலத்தில் உணர்ந்து கொண்டார்.

பிறகு காலம் அவரை ராக்கெட் தயாரிக்கும் பணியில் கொண்டுபோய் நிறுத்தியது.

இந்தியாவின் முதல் ஏவுகலமான எஸ்.எல்.வி.3 இவரின் முயற்சியால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அந்த வெற்றியைப் பற்றி 1980ல் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியே இவரிடம் கேட்டறிந்தார்.

நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்குப் பெரும்பங்கு ஆற்றிய அவரை 2002, ஜூலை 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் பதவியும் வந்தடைந்தது. ஆம், அந்த மேதை டாக்டர் அப்துல் கலாம்!

'நாம் உறங்கும்போது வருவதல்ல கனவு, நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு' என்ற அவர், சிறுவயதில் தான் கண்ட பறக்கும் கனவை, தன் அயராத உழைப்பின் மூலம் பின்னாளில் நனவாக்கிக்கொண்டவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us