தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எகனை மொகனை விடுகதை

எகனை மொகனை விடுகதை

எகனை மொகனை விடுகதை


PUBLISHED ON : ஏப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

01. இந்த ஆளோட அப்பா என்னோட மகன். இந்த ஆள் யார்?

பேரன்

02. எட்டுப் பேர் நாங்க. எங்க தலைவரைக் காப்பாத்த முன்னாலே போவோம் பின்னாலே வரமாட்டோம். நாங்க யாரு?

செஸ் பான்

03. ஒருவன் மூழ்கிவிட்டான் நனையவில்லை. எப்படி?

புதைகுழி

04. தயாரித்தவருக்குத் தேவையில்லை வாங்கியவருக்குப் பயனில்லை உபயோகிப்பவர் பார்ப்பதில்லை. அது எது?

சவப்பெட்டி

05. காலையில் நாலு கால் மதியத்தில் ரெண்டு கால் மாலையில் மூணு கால் விளக்கம் என்ன?

தவழுதல், நடத்தல், கழி ஊன்றி நடத்தல்

06. ஒரு மூலையில் இருந்துகொண்டே உலகத்தைச் சுற்றும். அது எது?

தபால் தலை (ஸ்டாம்ப்)

07. முடியும் இல்லாத, முகத்திலும் இல்லாத தாடி. அது எது?

காத்தாடி

08. சாப்பிடக் கொடுத்தால் உயிர்வாழ்வேன்; குடிக்கக் கொடுத்தால் நான் சாவேன். நான் யார்?

நெருப்பு

09. சுவருக்கு அப்பாலும் பார்க்க உதவும் கண்டுபிடிப்பு எது?

ஜன்னல்

10. வானவில்லில் கடைசியில் இருப்பது என்ன?

ல் என்னும் எழுத்து

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us