PUBLISHED ON : செப் 05, 2016

உலகில் உயர்ந்த சிகரம் (Peak) இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் (Everest Peak). இதன் உயரம் 8,848 கி.மீட்டர். சர் எட்மண்ட் பெர்சிவல் ஹில்லாரி (Sir Edmund Percival Hillary ) மற்றும் டென்ஸிங் நார்கே (Tenzing Norgay) இருவரும் இணைந்து 1953ல் இந்தச் சிகரத்தை அடைந்தார்கள்.
எட்மண்ட் ஹிலாரி 1919 ஜூலை 20ல் நியூசிலாந்து நாட்டில் பிறந்தார். மலையேறுவதில் அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டவர். இரண்டாவது உலகப் போரின் போது, நியூசிலாந்து விமானப்படையில் பணியாற்றியவர். ஜனவரி 2008ல் அவர் காலமானார். அவரது இறப்புக்குப் பின் இந்திய அரசாங்கம் ஹிலாரிக்கு பத்ம விபூஷன் (Padma Vibhushan) பட்டம் வழங்கி கெளரவித்தது.
டென்ஸிங் நார்கே 1914 ல் நேபாளத்தில் பிறந்தவர். இவர் பிறந்த இடமே மலைகள் சூழ்ந்த இடம் என்பதால் இயற்கையாகவே இமயமலை உச்சியை அடைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. டென்சிங் நார்கேக்கு பிறந்த தேதி தெரியாது. இமயமலை சிகரத்தை அடைந்த பிறகே அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவது என்று முடிவு செய்தார். அதனால், தான் மலை ஏறிய மே 29 ஆம் தேதியை தன்னுடைய பிறந்த தினமாகக் கொண்டாடினார். டென்சிங் நார்கே இறந்ததும் மே (9, 1986) மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.
