PUBLISHED ON : டிச 09, 2019
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பகுதி 9இன் 243B ஷரத்து, ஒவ்வொரு மாநிலத்திலும் கிராம, இடைநிலை மற்றும் மாவட்ட அளவில் பஞ்சாயத்துகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், இடைநிலை பஞ்சாயத்துகள் அமைக்கத் தேவையில்லை என்றும் சொல்கிறது.
மிசோரம் மாநிலத்தின் மக்கள்தொகை சுமார் 12 லட்சம். இங்கே பஞ்சாயத்து அமைப்பு இல்லை. மக்கள்தொகை காரணமாகத்தான் இங்கே பஞ்சாயத்துகள் இல்லையா?
இல்லை. பகுதி 9இல் (243Mஇல் குறிப்பிடப்பட்டிருக்கிறது) கொடுக்கப்பட்ட பஞ்சாயத்து முறை நாகாலாந்து, மேகாலயா மற்றும் மிசோரத்துக்கு செல்லுபடி ஆகாது.
மாவட்ட அளவிலான பஞ்சாயத்துகள், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைக்கப்படத் தேவையில்லை. 243Dஇல் கொடுக்கப்பட்டுள்ள பழங்குடியினருக்கான ஒதுக்கீடு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் செல்லுபடி ஆகாது.
இம்மாநிலங்களில் நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரப்படும் அதிகார அமைப்புகளை மாற்றாமல் இருக்கவும், இவர்களது கலாசாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
