தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மூன்று 'தலை'கள்!

மூன்று 'தலை'கள்!

மூன்று 'தலை'கள்!


PUBLISHED ON : ஜூலை 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கில்லி' தோனி

பெயர் : மகேந்திர சிங் தோனி

பிறப்பு : ஜூலை 7, 1981

இடம் : ராஞ்சி, பீஹார்

செல்லப் பெயர்: மஹி

இளம் வயதில் துறுதுறு விளையாட்டுப் பையன். பிடித்த விளையாட்டு கால்பந்து, பாட்மின்டன்! கால்பந்து அணியில் கோல் கீப்பராக விளையாடிக் கொண்டு இருந்தார். ஒரு கிரிக்கெட் போட்டியின்போது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்பட்டதால் தோனியை கீப்பிங் செய்ய அழைத்தார்கள் நண்பர்கள். அப்படித்தான் கிரிக்கெட் உலகிற்குள் நுழைந்தார், இந்திய ஒரு நாள் மற்றும் 'டுவென்டி - 20' கேப்டன் தோனி. வங்கதேச அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் 2004ல் அறிமுகமாகி, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருக்கிறார். சொல்லி வைத்ததுபோல கில்லியாக ஆட்டத்தை முடிக்கும் 'மேட்ச் பினிஷர்' தோனி! ஐ.சி.சி. நடத்தும் மூன்றுவிதமான உலக கோப்பைத் தொடரிலும் (2007 - 'டுவென்டி - 20', 2011 - ஒரு நாள், 2013 - சாம்பியன்ஸ் டிராபி) பட்டம் வென்ற ஒரே கேப்டன் இவர்தான்.

'தாதா' கங்குலி

பெயர் : சவுரவ் சந்திதாஸ் கங்குலி

பிறப்பு : ஜூலை 8, 1972

இடம் : கொல்கட்டா, மேற்கு வங்கம்

செல்லப் பெயர்: பெங்கால் டைகர்

இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. வலக்கைப் பழக்கம் உள்ளவராக இருந்தாலும் இடக்கை ஆட்டக்காரராகவே தன் பயிற்சியைத் தொடங்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுக வாய்ப்பைப் பெற்றார். கடந்த 2003ல் நடந்த உலக கோப்பைத் தொடரில், அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இவர், அன்னிய மண்ணில் நடந்த டெஸ்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகள் (11) தேடித் தந்த கேப்டன்! லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடர் ஃபைனலில் (2002) இங்கிலாந்தை வீழ்த்தி பார்ப்பவர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். ரசிகர்களால் 'தாதா' எனச் செல்லமாக அழைக்கப்படும் இவர், 8ஆம் இடத்தில் இருந்த இந்திய அணியை 2ஆம் இடத்துக்குக் கொண்டுவந்தார். ஒரு தலைவன் எப்படி இருக்க வேன்டும் என்பதற்கு, கங்குலி சிறந்த உதாரணம்!

'லிட்டில் மாஸ்டர்' கவாஸ்கர்

பெயர்: சுனில் மனோகர் கவாஸ்கர்

பிறப்பு: ஜூலை 10, 1949

இடம்: மும்பை, மஹாராஷ்டிரா

செல்லப் பெயர்: சன்னி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர். பள்ளி நாட்களில் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு 'இந்தியாவின் பெஸ்ட் ஸ்கூல்பாய் கிரிக்கெட்டர்' என்று பெயர் எடுத்த 'லிட்டில் மாஸ்டர்'. டிரினிடாட் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1971ல் அறிமுகமானார். டெஸ்ட் வரலாற்றில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த சாதனையை மூன்று முறை நிகழ்த்திய முதல் வீரர்! அது தவிர, டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் இவருக்குத்தான்! மத்திய அரசின் பத்மபூஷன், அர்ஜுனா விருதுகளை வென்றுள்ளார். 'சன்னி டேஸ்' என்ற சுயசரிதை மற்றும் கிரிக்கெட் தொடர்பான பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us