PUBLISHED ON : பிப் 01, 2016

'எட்டு எட்டா நாலு எட்டு வெச்சா எவரெஸ்ட்டில் (Everest) ஏறிடலாம்' என்று ஓர் ஆசிரியர் சொன்னாராம். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர்! உலகத்திலேயே மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட்.
இது இமயமலையில் சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் உள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தைக் கண்டு சொன்னவர் ராதாநாத் சிக்தார் (Radhanath Sikdar) இந்தியக் கணிதவியல் அறிஞரான இவர், வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்தவர் சர்.ஜார்ஜ் எவரெஸ்ட்
(Sir George Everest) என்ற பிரிட்டிஷ் புவியியலாளர். இவரது நினைவாகவே 1865ல் எவரெஸ்ட் என்ற பெயர் வைக்கப்பட்டது. இவர் இந்தியாவின் தலைமை சர்வேயராக (சர்வேயர் ஜெனரல் ஆஃப் இந்தியா - Surveyor General of India) பணிபுரிந்தவர்.
எவரெஸ்ட் உச்சியை இதுவரை 5000க்கும் மேற்பட்டவர்கள் அடைந்து இருக்கிறார்கள். இவர்களில், 13 வயது சிறுமி, பார்வையற்றவர், 80 வயது முதியவர் என எல்லா தரப்பினரும் உண்டு.
