PUBLISHED ON : ஏப் 04, 2016
அ நிறம் | அளவு
வியக்க வைக்கும் ஹரப்பா நாகரிகம் சிந்து நதிக்கரையை ஒட்டிய சமவெளிப் பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று ஹரப்பா. ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பாக, நகர நாகரிக வாழ்க்கைக்கு முன்னோடியாக விளங்கியது ஹரப்பா நாகரிகம்.
திட்டமிடப்பட்ட நகரங்கள், சாலை, செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், மாடிப்படிகள், கிணறு, கழிப்பறைகள், கழிவுநீர் அகற்றும் முறைகள் என ஹரப்பா நாகரிகம் வியக்க வைக்கிறது.
தங்கம், வெள்ளி, தந்தம், ஓடுகள், களிமண், செயற்கைக் கற்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட அணிகலன்கள், பொம்மைகள் போன்றவற்றை அந்தக் காலத்திலேயே செய்திருக்கிறார்கள்.
கோதுமை, பார்லி, பருத்தி, பேரீச்சை போன்ற பழங்களை விளைவித்து, மெசபடோமிய நாகரிகத்தைச் சேர்ந்த மக்களுடன் வியாபார உறவுகளைச் செய்திருக்கிறார்கள்.
