தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பஞ்சு போன்ற பழம் நீர்க்குமளி

பஞ்சு போன்ற பழம் நீர்க்குமளி

பஞ்சு போன்ற பழம் நீர்க்குமளி


PUBLISHED ON : நவ 13, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆங்கிலப் பெயர்கள்: 'ரோஸ் வாட்டர் ஆப்பிள்' (Rose Water Apple),

'ஜாவா ஆப்பிள்' (Java Apple)

தாவரவியல் பெயர்: 'சிஸிஜியம் சமரன்ஜென்ஸ்' (Syzygium Samarangense)

வேறு பெயர்கள்: சம்பு, சம்பக்கா (மலையாளம்)

நீர்க்குமளி அல்லது சம்பு என்பது, 'மிர்ட்டாசியே' (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த கனி தரும் மரம். சுந்தா தீவுகள், மலாய் தீபகற்பம், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.

வளரும் தன்மை:

அதிகக் கிளைகளுடன் 15 மீட்டர் உயரம் வரை வளரும். இளஞ்சிவப்பாகப் பட்டையை உரிக்கும் இயல்புள்ள தண்டுப்பகுதியைக் கொண்டிருக்கும். வாசனைமிக்க இதன் இலைகள், எதிரடுக்கில் 10 - 20 செ.மீ. அளவில் முட்டை வடிவில் காணப்படும். இலைக்காம்புகள் மிகச் சிறியவை. நறுமணம் மிக்க பூக்கள் 4 இதழ்களுடன் இளமஞ்சள் நிறத்தில் கொத்தாகப் பூக்கும். பழங்கள் இனிப்புச்சுவை கொண்டவை. இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் பளபளப்பான முக்கோண வடிவத் தட்டையான அடிப்பாகமுள்ளவை. வெண்ணிற நீர் நிறைந்த பஞ்சு போன்ற மென்மையான சதைப்பகுதியின் நடுவில் 1 அல்லது 2 சிறிய சாம்பல் நிற விதைகளைக் கொண்ட பழங்கள் மிதமான அமிலச்சுவை கொண்டவை. மரம் 5 ஆண்டுகளில் பலன்தரத் தொடங்கும். மார்ச் முதல் ஜூன் வரையில் பூக்களையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை பழங்களையும் உண்டாக்கும். விதைகள் மூலமாகவும், பதியன் இடப்பட்டும் இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

சத்துகள்

சுவையான நீர்க்குமளிப் பழங்கள் பச்சையாகவும் சமைத்தும் உண்ணப்படுகின்றன. பழங்களில், புரதம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, சர்க்கரை, கால்சியம், வைட்டமின் சி, ஏ,

பாஸ்பரஸ், சாம்பல் சத்து, சிட்ரிக் அமிலம் ஆகியவை உள்ளன.

பயன்கள்

ரத்தத்தில் மாவு சர்க்கரையாக மாறும் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைப்பதால், நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. ரத்தத்தின் கொழுப்பு அளவைக் குறைக்கவும், வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகவும், காய்ச்சலைக் குணமாக்கவும் பயன்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us