PUBLISHED ON : ஜூலை 03, 2023
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எந்த விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 13இல் விண்ணில் ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ உறுதி செய்துள்ளது?
அ. சந்திரயான் - 1
ஆ. சந்திரயான் - 4
இ. சந்திரயான் - 2
ஈ. சந்திரயான் - 3
2. இந்தியாவின் மாநில முதல்வர் ஒருவரைப் பற்றிய ஆங்கில காமிக்ஸ் புத்தகம் ஒன்று, சென்னையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவர் யார்?
அ. யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசம்
ஆ. ஸ்டாலின், தமிழ்நாடு
இ. சித்தராமையா, கர்நாடகம்
ஈ. பினராயி விஜயன், கேரளம்
3. ராஜ்யசபாவில் விரைவில் காலியாக உள்ள எத்தனை நியமன எம்.பி. இடங்களுக்கு, வரும் ஜூலை 24இல் தேர்தல் நடத்தப்பட உள்ளது?
அ. 15
ஆ. 20
இ. 10
ஈ. 5
4. உலக நாடுகளில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பைக் கொண்டுள்ள நாடு எது?
அ. சீனா
ஆ. இந்தியா
இ. ஜப்பான்
ஈ. ரஷ்யா
5. அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இந்திய வம்சாவளி யினருடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு நிகழ்ச்சியில், நம் தேசிய கீதத்தைப் பாடிய அமெரிக்கப் பாடகி யார்?
அ. மேரி மில்பென்
ஆ. மேரி மிச்செல்
இ. இசபெல்லா
ஈ. கேட் டெய்சி
6. அமெரிக்காவின் எந்த நகரில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது?
அ. சிகாகோ
ஆ. ஆஸ்டின்
இ. நியூயார்க்
ஈ. சான் பிரான்சிஸ்கோ
7. இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, எவ்வளவு சதவீதமாகக் குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது?
அ. 3.5
ஆ. 2.8
இ. 4.6
ஈ. 3.9
விடை: 1. ஈ, 2. அ, 3. இ, 4. ஆ, 5. அ, 6. இ, 7. ஈ.
