sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கோள் அறிவோம்

/

கோள் அறிவோம்

கோள் அறிவோம்

கோள் அறிவோம்


PUBLISHED ON : அக் 10, 2016

Google News

PUBLISHED ON : அக் 10, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதன் (Mercury):



இது சூரியனுக்கு பக்கத்திலேயே இருப்பதால் மிகவும் சூடாக இருக்கிறது. இதன் வெப்ப அளவு 800 டிகிரி பாரன் ஹீட். சூரியனில் இருந்து 57.91 மில்லியன் கி.மீ. தூரத்தில் (Distance) இருக்கிறது. (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) இரவில் மைனஸ் 209 டிகிரி பாரன் ஹீட் அளவிற்கு கடுமையாகக் குளிர்ந்திருக்கும்

வெள்ளி (Venus):



சூரியனைச் சுற்றி வர 225 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. தன்னைத்தானே சுற்றிவர 243 நாட்கள். சூரியனுக்கும், வெள்ளி கோளுக்குமான இடைவெளி 108. 2 மில்லியன் கி.மீ. பார்ப்பதற்கு 'பிங்க்' நிறத்தில் இருக்கும். வெள்ளிதான் சூரியக் குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள். இதற்கு 'ஈவ்னிங் ஸ்டார்' என்று ஒரு பெயர் உண்டு. சூரியன் மறையும் போது வானத்தில் மேற்கில் பார்க்கலாம்.

பூமி (earth):



சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள். நீலக்கோள் என்றும் அழைக்கப்படுகிறது. உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கோள். சுமார் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது. தன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணி நேரமும், சூரியனைச் சுற்றிவர 365.24 நாட்களும் எடுத்துக்கொள்கிறது. சூரியனில் இருந்து 149.6 மில்லியன் கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

செவ்வாய் (mars):



சிவப்பு நிறத்தில் உள்ள கோள். இந்தக் கோள் சூரியனில் இருந்து 227.9. மில்லியன் கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இங்கு கார்பன் டை ஆக்சைடு (Carbon Di oxide)வாயு அதிகம் நிறைந்துள்ளது. மலைகள் நிறைந்துள்ளன. செவ்வாயில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்யவும், மனிதர்கள் வாழ தகுதி உள்ளதா என்பதை அறியவும், இந்தியா, 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியது. கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய விண்வெளி ஆய்வு மையம்'இஸ்ரோ', மங்கள்யானை விண்ணுக்கு அனுப்பியது.

வியாழன் (Jupiter):



மற்ற எல்லா கோள்களை விடவும் மிகப் பெரியது. மற்ற கோள்களை சேர்த்தால் வரும் எடையை விட, இரண்டு பங்கு பெரியது. பூமியை விட 1,300 மடங்கு பெரியது . சூரியனில் இருந்து 778.5 மில்லியன் கி. மீ. தூரத்தில் இருக்கிறது. பூமியில் ஏற்படும் ஒரு பெரும் புயலை விடவும், வியாழனில் ஆறு மடங்கு அதிகமாக புயல் வீசும். 67(துணைக்கோள்-Natural satellites) நிலாக்கள் வியாழனுக்கு துணையாக இருக்கின்றன.

சனி (satrun):



சனி, சூரியனில் இருந்து 1.429 பில்லியன் கி.மீ. இடைவெளியில் உள்ளது (ஒரு பில்லியன் - நூறு கோடி). மிகவும் அழகான கோள் என்று அழைக்கப்படுகிறது. கணக்கிடவே முடியாத பனிக்கட்டிகளும், தூசு படலமும் நிறைந்துள்ளது. இந்தக் கோளுக்கு 62 குட்டி நிலாக்கள் உள்ளன.

யூரேனஸ் (uranus): இப்படி ஒரு கோள் இருப்பதாகவே முதலில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. 1781 ல் தான் யூரேனஸ் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டன. சூரியனுக்கும், யூரேஸுக்குமான இடைவெளி 4.498 பில்லியன் கி.மீ. இந்தக் கோளைச் சுற்றி அடர்ந்த கடல் நீலம் கொண்ட மீத்தேன் வாயு நிரம்பி உள்ளதால் நீல நிறமாகக் காட்சி தருகிறது. 27 துணை நிலாக்கள் யூரேனஸுக்கு உண்டு.

நெப்டியூன் (Neptune):



சூரியனுக்கும், நெப்டியூனுக்கும் 4.498 பில்லியன் கி.மீ. இடைவெளி உள்ளது. இதுவும் நீல நிறக்கோள்தான். 1846 ல் இந்தக் கோள் கண்டு பிடிக்கப்பட்டது. சூரியனை ஒரு முறை சுற்றி வர 164 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. எப்பொழுதும் -346 டிகிரி வெப்ப நிலையிலேயே உறைந்து இருக்கிறது.

புளூட்டோ (pluto):



சூரியனுக்கு அப்பால் 3.67 பில்லியன் கி.மீ.தூரத்தில் இருக்கிறது. குறுங்கோள்(Dwarf)என்று அழைக்கப்படுகிறது. மைனஸ் 364 டிகிரி பாரன் ஹீட்டில் இக்குறுங்கோள் இருக்கும். மற்ற எட்டுக்கோள்களை விட இங்குதான் குளிர்ச்சி அதிகம். 1930ல் புளூட்டோ கண்டு பிடிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச வானியல் ஆய்வுக் கழகம் புளூட்டோவை சூரிய மண்டலத்தில் ஒரு கோளாகச் சேர்க்கக்கூடாது என்று கூறி, குறுங்கோளாக அறிவித்தது.

புதியதாக நெப்டியூன் (Neptune) கோளுக்கு அப்பால், பூமியை விட பத்து மடங்கு அதிக எடை கொண்ட, ஒரு புதிய கோள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். அதற்கு 'பிளானட் 9 '(Planet 9) என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள்.






      Dinamalar
      Follow us