sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/பிரிட்டன் ஏன் பிரிந்தது?

பிரிட்டன் ஏன் பிரிந்தது?

பிரிட்டன் ஏன் பிரிந்தது?


PUBLISHED ON : ஜூலை 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்தது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பெரும்பாலான மக்களுக்கு பிரிட்டன் என்றால் இங்கிலாந்துதான் நினைவுக்கு வரும். ஆனால், பிரிட்டன் என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் உள்ளடக்கியது. இதுவே கிரேட் பிரிட்டன் (Great Britain) எனப்படுகிறது. இதன் முழுப்பெயர் 'யுனைட்டட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் அண்டு நார்தர்ன் அயர்லாந்து' (United Kingdom of Great Britain and Northern Ireland).

ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தொழில், வர்த்தகம் போன்றவற்றில் ஒன்றிணைந்து செயல்பட்டன. மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம் (Maastricht Treaty) என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1993ல் ஐரோப்பிய ஒன்றியம் உருவானது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. 'யூரோ' (Euro) எனற பொது கரன்சியையும் பயன்படுத்தத் தொடங்கின. இது தவிர, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாட்டு மக்கள் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்குள் விசா இல்லாமல் பயணம் செய்யலாம், பணி புரியலாம் என்ற வசதியும் உண்டு.

ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்று இருந்தாலும் பிரிட்டன் தனித்தே செயல்பட்டு வந்தது. ஐரோப்பிய யூனியனின் யூரோ கரன்சியைக்கூட பிரிட்டன் ஏற்கவில்லை. இங்கிலாந்தின் கரன்சியான 'பவுண்ட்'டையே (Pound) பயன்படுத்தி வந்தது. ஐக்கியக் குடியரசில் (United Kingdom) உள்ள இங்கிலாந்து பொருளாதார ரீதியில் வலுவான நாடு. இதனால், ஐரோப்பிய யூனியனில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்கள் தொழில், வேலை வாய்ப்புகள் தேடி பிரிட்டனுக்குப் புலம்பெயர்கின்றனர். பிரிட்டனின் சொந்த மக்கள் வெளிநாட்டினர் தங்கள் வேலை வாய்ப்புகளைப் பறிப்பதாகக் கருதினார்கள். இதன் விளைவே 'பிரெக்சிட்' (Brexit) என்ற பிரிட்டன் பிரிவுச் சம்பவம்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது குறித்து இங்கிலாந்து பிரதமராக கேமரூன் பதவி ஏற்றதும் விவாதங்கள் தொடங்கின. இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, 1 கோடியே 57 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். 58% மக்கள் வெளியேற ஆதரவு, 42% மக்கள் வெளியேற எதிர்ப்பு. இதன் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவதாக பிரிட்டன் அறிவித்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டிஷ் வெளியேறும் முக்கியமான இந்த நிகழ்வு 'பிரிட்டிஷ் எக்சிட்' (British Exit) என்பதன் சுருக்கமான 'பிரெக்சிட்' (Brexit) என்ற பெயரால் குறிக்கப்படுகிறது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us