PUBLISHED ON : டிச 31, 2018

கடந்த சில ஆண்டுகளாக, தொழில்நுட்பம் கானுயிர் பாதுகாப்பில் பெரும்பங்கு வகித்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் ட்ரோன் விமானங்கள், காட்டிலுள்ள யானைகளின் எண்ணிக்கையையும், இரயில் பாதைகளை அவை கடப்பதையும் கண்டறியப் பயன்படுகின்றன. இதன்மூலம், யானைகள் இரயில் விபத்துகளில் இறப்பது பெருமளவு தவிர்க்கப்படுகிறது.
வேட்டையாடும் வனவிலங்குகளின் குணாதிசயங்களைக் கண்டறிய, ஆழ்ந்து கற்றல் (Deep learning) முறையை பயன்படுத்துகின்றனர். இதற்கு நிழற்பட பொறி (Camera trap) கருவி உதவுகிறது. பெரும்பாலும் கானுயிர் தொடர்பான தகவல்கள் கையெழுத்துப் பிரதிகளாக இருக்கும். அவற்றை, தற்போது ஸ்கேன் செய்து, இணையத்தில் வலையேற்றி வைக்க முடியும். இதனை, பல்வேறு களப்பணியாளர்கள், தங்களுடைய இருப்பிடங்களில் இருந்தே, இணையம் வழியாக தரவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்த முடியும்.
உள்ளூர் மொழிகளில் பல்வேறு செயலிகள், மென்பொருட்கள் உருவாக்கவேண்டிய தேவை உள்ளது. எனவே, தொழில்நுட்பத்தை கானுயிர் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவோருக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது.
- ஆதித்யா கங்காதரன்

