sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/வீட்டுக்கு ஒரு ரோபோ வந்துடுமோ?

வீட்டுக்கு ஒரு ரோபோ வந்துடுமோ?

வீட்டுக்கு ஒரு ரோபோ வந்துடுமோ?


PUBLISHED ON : ஆக 19, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''இலக்குகளை அடைய, அது பற்றியே கனவு காணுங்கள்'' என்று சொன்னார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகி வருகின்றன. சமீபத்தில் படித்து வியந்த தொழில்நுட்பச் செய்தி என்ன? என கேட்டிருந்தோம். பதிலறிய, விருத்தாசலம் பி.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம்.

மதுபாலா 11ஆம் வகுப்பு

கழிவுநீர் அடைப்புகளைச் சரிசெய்ய, குப்பைகளைத் தரம் பிரிக்க வெளிநாட்டில் ரோபோக்களைப் பயன்படுத்துறாங்களாம். எங்க பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தும்போது சொன்னார். அதிலும், குப்பையை உரமாக்கும் ரோபோக்களின் திறமையைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்.

திவ்யா 7ஆம் வகுப்பு

நாசாவும் இஸ்ரோவும் செஞ்சிட்டிருக்கிற விண்வெளி ஆராய்ச்சிகளைப் படிக்கும்போது, பிரமிப்பா இருக்கும். சமீபத்தில் கூட 'சூப்பர் எர்த்'ன்னு ஒரு கோளைக் கண்டுபிடிச்சிருக்காங்க. அங்கே மனிதர்கள் வாழமுடியுமான்னு ஆராய்ச்சிகளும் நடக்குதாம்.

கனிஷ்யா 9ஆம் வகுப்பு

பிளாஸ்டிக் சூழலுக்குக் கேடு, மக்காது. அதைக்கண்ட இடத்துல வீசாம இருக்க, ஒரு மெஷினை வடிவமைச்சிருக்காங்களாம். அதுல நாம யூஸ் பண்ணுன, பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டால், சூழல் கேடு இல்லாத பொருட்களைக் கொடுக்குமாம். மும்பையில்கூட வந்திடுச்சுன்னு படிச்சேன். அதை நம்ம ஊருக்கும் கொண்டுவரலாம்.

சிநேகா 6ஆம் வகுப்பு

ஜப்பானில் உள்ள ஓட்டல்கள், கம்பெனிகளில் வாடிக்கையாளர்களின் கட்டளைக்கு ஏற்ப ரோபோக்கள் வேலை செய்யுது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும்கூட சில இடங்களில் இப்படியான ரோபோக்கள் வந்துருச்சுன்னு படிச்சேன். போற போக்கைப் பார்த்தால், வீட்டுக்கொரு ரோபோ வந்துடும் போல!

அவந்திகா 10ஆம் வகுப்பு

'பெப்பர்'னு ஒரு வகை ரோபோக்கள், நாம சொல்ற ஆர்டர்களைத் தனித்தனியாக நிறைவேத்தும்னு ஒரு புக்குல படிச்சேன். அந்தச் செய்தி கொடுத்த ஆச்சரியத்தில், ரோபோக்களைப் பத்தி படிச்சுட்டு இருக்கேன்.

லாவன்யா 9ஆம் வகுப்பு

சிங்கப்பூரில் நிலத்தடி நீர்மட்டம் உயர, ஸ்பெஷல் மெஷின வெச்சு, பூமியைத் துளையிடுறாங்க. அப்புறம், அதன்மூலம் மழை நீர் பூமிக்குள் செல்லும்படி செஞ்சிருக்காங்களாம். இதனால் மழைநீர் வீணாகாது. இந்த நியூஸை டிவியில் பார்த்தேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us