PUBLISHED ON : ஆக 14, 2023
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு சரியான வார்த்தையைக் கண்டுபிடியுங்கள்!
1. இது ஒரு 6 எழுத்துச் சொல்.
* முதல் 3 எழுத்து உலகின் மிகப்பெரிய பரப்பைக் குறிக்கிறது.
* 2,3,4 மனித உடலின் ஒரு பகுதியைக் குறிக்கிறது
* 3,4,5 என்பது வட்டத்தின் ஒரு பகுதியைக் குறிக்கிறது.
* இணையத்தில் நுழைந்தவுடன் முதலில் இதைத்தான் செய்வோம்.
2. இது ஒரு 8 எழுத்துச் சொல்.
* முதல் 4 ஒரு வினாச்சொல்.
* 2,3,4 நம் தலையில் அணியும் பொருள்.
* 6,7,8 ஒரு மென்பொருள்
* 7,8 ஒரே எழுத்துகள்.
* இது ஒரு சமூக வலைத்தளம்
3. இது ஒரு 6 எழுத்துச் சொல்.
* 6,5,2 ஆகிய எழுத்துகள் ஒரு பானத்தைக் குறிக்கும்.
* 4,5,2,3 ஆகிய எழுத்துகள் ஒரு பழத்தைக் குறிக்கும்.
* 3,2,6 எழுத்துகள் ஒரு விலங்கைக் குறிக்கும்.
* அந்த விலங்கின் எதிரி 1,2,6.
* இது தரையை அலங்கரிக்கும் பொருள்.
விடை!
1. SEARCH
2. WHATSAPP
3. CARPET
