தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/மஞ்சள் நிறமே

மஞ்சள் நிறமே

மஞ்சள் நிறமே


PUBLISHED ON : ஜூலை 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளி வாகனங்களை அன்றாடம் பார்க்கிறோம். மஞ்சள் நிறத்தை ஏன் பள்ளி வாகனங்களுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்? மஞ்சள் நிறம் மற்ற நிறங்களைவிட அதிவேகமாக நம் கவனத்தை ஈர்க்கக்கூடியது. சிவப்பைவிட மஞ்சள், 1.24 மடங்கு விரைவாக நம் புறப்பார்வையை ('பெரிபெரல் விஷன்' - Peripheral Vision) ஈர்க்கிறது. அது மட்டுமல்ல, காலை, மாலை வேளைகளில் மஞ்சள் வண்ணமே பளிச்சென்று தெரியும்.

கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஃப்ராங்க் (Dr. Frank W. Cyr) என்பவர் பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் நிறம் அளிக்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். பள்ளி வாகனங்களின் அமைப்பு, நிறம் எப்படி இருக்கலாம் என முடிவு செய்வதற்காக 1939-ல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணமே பொருத்தமானது என முடிவு செய்யப்பட்டது. டாக்டர் ஃபிராங்க் 'மஞ்சள் நிறப் பள்ளி வாகனங்களின் தந்தை' (ஃபாதர் ஆஃப் யெல்லோ ஸ்கூல் பஸ் - Father of Yellow School Bus) என அழைக்கப்படுகிறார்.

உலகின் பெரும்பான்மையான நாடுகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வாகனங்களுக்கு மஞ்சள் நிறத்தையே பயன்படுத்துகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us